என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தைரியம் இருந்தா என் தலைவர் மேல... ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேச்சு
- தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
- இளைஞர் புரட்சி 2026-ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது ஆதவ் அர்ஜூனா.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் 9 மணி நேரம் அழுதார். மக்கள் உணர்வை வைத்து அரசியல் செய்வது தமிழக வெற்றிக் கழகம் கிடையாது.
கரூர் மக்கள் உயிரிழந்த அந்த 30 நாட்களும் கண்ணீர் சிந்தியது மட்டும் அல்லாமல் அவர்களை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட விஜய் வெளியிடவில்லை.
தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
கூட்டத்திற்கு நிர்வாகிகள் பத்தாயிரம் பேர் வருகிறார்கள் என்று சொல்ல முடியுமே தவிர மக்கள் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று எங்களால் எப்படி கணிக்க முடியும்?
இதெல்லாம் உளவுத்துறைக்கு தெரியாதா? இது தெரியவில்லை என்றால் உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.
சட்டமன்றத் தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே விஜய், உங்களுக்கு நன்றி இல்லையா?
நாங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுப்போம் என்கிறார் துரைமுருகன். தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம். முதலில் அவர் வீட்டிற்கு செல்லுங்கள், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
இளைஞர் புரட்சி 2026ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






