என் மலர்
நீங்கள் தேடியது "grand feast"
- கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
- அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று விமானம் மூலம் மதுரை சென்றார். அவர் இன்றும், நாளையும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பொதுக்குழுவிற்காக மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதுரையில் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வழங்கப்படவுள்ள மதிய விருந்து பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பொதுக்குழுவில் பங்கேற்கும் திமுக உறுப்பினர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் மதிய விருந்துக்கு வழங்கப்படுகிறது.







