search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NDA leaders"

    காந்திநகரில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு அகமதாபாத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். #AmitShah #LokSabhaElections2019
    அகமதாபாத்:

    பாராளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியானது, பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த முறை போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷா முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்நிலையில், அமித் ஷா இன்று வேட்பு மனு தாக்கலுக்கு தயாரானார். இதற்காக இன்று காலை அகமதாபாத் வந்து சேர்ந்த அவர், சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரது செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் சிங் பாதல், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



    இந்த பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்ட அமித் ஷா, காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அமித் ஷாவின் வேட்பு மனு தாக்கல் கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும், மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்றும் மாநில பாஜக கருதுகிறது.

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.  #AmitShah #LokSabhaElections2019

    மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அளித்த விருந்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டார். #Bihar #NDALeaders #CMNitishKumar
    பாட்னா:

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, அரசின் சாதனைகளை மக்களிடமும், முக்கிய பிரபலங்களிடமும் பாஜகவினர் விளக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், பீகார் மாநில தலைநகரம் பாட்னாவில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்த கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்,, மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான், ராதா மோகன் சிங் மற்றும் துணை முதல் மந்தி சுஷில் குமார் மோடி, மாநில பாஜக தலைவர் பூபேந்திர யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர்.
     
    அடுத்த ஆண்டு வரவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர வேண்டும் என முவுவானது.#Bihar #NDALeaders #CMNitishKumar
    ×