என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நமக்குள் எதிர்ப்பு வேண்டாம்- நம் எதிரி தி.மு.க. தான்..!- அன்புமணி ராமதாஸ்
    X

    நமக்குள் எதிர்ப்பு வேண்டாம்- நம் எதிரி தி.மு.க. தான்..!- அன்புமணி ராமதாஸ்

    • நம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்.
    • தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணத்தை தொடங்க இருக்கிறேன்.

    மதுராந்தகத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

    அப்போது அவர், செங்கல்பட்டு மாவட்ட பாமக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கினார்.

    பொதுக்குழு கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

    மாமல்லபுரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டின் திருஷ்டிதான் தற்போது நிகழ்ந்த பிரச்சனைகளுக்கு காரணம்.

    நம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல். அந்த வயித்தெறிச்சலில் வந்த திருஷ்டிதான் கட்சியில் தற்போது நடக்கும் சம்பவங்கள். ஆனாலும் திருஷ்டி எல்லாம் போய்விட்டது.

    விரைவில் திருப்போரூர் முருகனை வணங்கி தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணத்தை தொடங்க இருக்கிறேன்.

    2026 தேர்தலில் நிச்சயமாக பாமக அங்கமாக இருக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும். கூட்டணி ஆட்சியில் அங்கமாக இருப்போம்.

    சமூக வலைதளங்களில் நம்மை நாமே எதிர்த்து பதிவுகளை போட வேண்டாம். நம் எதிரி திமுக தான்.

    பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வேற லெவலில் இருக்கும். தம்பிகளா நீங்க ரெடியா?

    பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் எதிர்க்க வேண்டியது திமுகவைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×