search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்பட்டி"

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு சக கைதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவர் தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை சிறைக் காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயக்குமார் இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
    • கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு காலை, மாலை என 4 முறை கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது.

    மேலும் மினி பஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.

    இதனால் அந்த கிராம மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று காலை கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.

    • புற்றுக்கோவிலில் வைகாசி பவுர்ணமி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வைகாசி பவுர்ணமி சிறப்புப் பூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மூலமந்திர ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது.

    பிறகு சசங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார்.

    இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • எரிபொருள் சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மத்திய பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தனியார் மினிபஸ் ஓட்டுநர்கள், பயிற்சி பள்ளி நிர்வாகிகள், ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை மத்திய பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எரிபொருள் சிக்கனம், சாலை பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு குறித்து பேசினார்.

    கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×