search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் கூறும் கருத்துகள் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது; கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
    X

    கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி அளித்தபோது எடுத்தபடம்.

    ஓ.பன்னீர்செல்வம் கூறும் கருத்துகள் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது; கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி

    • ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறினார்.
    • கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீப்பெட்டி தொழில்

    டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தீப்பெட்டி தொழிலுக்கு பாதகமான லைட்டர்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும். கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

    அதன்படி தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் வில்லிசேரி கிராமத்தில் இந்த மாதத்துக்குள் வங்கி கிளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வங்கி திறப்பு விழாவுக்கு நிர்மலா சீதாராமன் வருவார் என்று எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க. பொதுக்குழு ஏற்கனவே வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. இதில் 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அதன் பின்னர் அவர் கூறும் கருத்துகள் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது.

    கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தி.மு.க.வினர் யாரும் வாய் திறக்க மறுக்கின்றனர். இந்த சம்பவம் தமிழக முதல்வரின் தொகுதியில் நடந்துள்ளது. கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே தமிழகத்தில் சிகிச்சை தேவைப்படும் நிலையில் சுகாதாரத்துறை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×