என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியன் வங்கி"

    • இந்த கட்டணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளுக்கு இடையே வேறுபட்டு காணப்படுகின்றன.
    • கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    சென்னை:

    வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பாக கட்டண விதிமுறைகளில் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி சீரான இடைவௌியில் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இதனை வங்கிகள் பின்பற்றி வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து வருகின்றன.

    அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுக்க முடியும். தங்கள் வங்கி அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து பெருநகரங்களில் ஒரு மாதத்துக்கு 3 முறையும், கிராமப்புறங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம்.

    ஏ.டி.எம்.களில் நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவை தாண்டி பணம் எடுக்கும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த கட்டணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளுக்கு இடையே வேறுபட்டு காணப்படுகின்றன. புதிய கட்டணத்தை பெரும்பாலான வங்கிகள் கடந்த மே மாதம் அமல்படுத்தின.



    இந்தநிலையில், இந்தியன் வங்கி சார்பில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) பறந்தது. அதில், "ஜூலை 1-ந்தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23 மற்றும் ஜி.எஸ்.டி.யும், நிதி அல்லாத சேவைகளுக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 மற்றும் ஜி.எஸ்.டி.யும் விதிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது ரூ.21 மற்றும் ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 78 காசுகள் சேர்த்து 24 ரூபாய் 78 காசுகள் தற்போது வசூலிக்கப்படுகிறது. ஜூலை 1-ந் தேதிக்கு பிறகு இந்த கட்டணம் ரூ.2 அதிகரித்து 26 ரூபாய் 78 காசுகள் என்ற அளவுக்கு உயரலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள், அந்த வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றியதற்காக ஏ.டி.எம். உள்பரிமாற்ற கட்டணங்களை செலுத்தும். அதற்காகவே பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல சில தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிற வங்கிகளில் அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வை ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. இதற்கிடையே கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
    • வங்கியின் பணிகள் குறித்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

    கோவில்பட்டி:

    வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைப்ப தற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, இந்தியன் வங்கி பொதுமேலாளர் கணேஷ்ராம், மண்டல அலுவலர் ஜெயபாண்டியன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் வங்கியின் பணிகள் குறித்து எம்.எல்.ஏ., கேட்டறிந்தார். இந்த வங்கி சிறப்பாக செயல்பட வில்லிசேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஒத்துழைப்பார்கள் என எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் அழகர்சாமி, பழனிகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • ஏராளமான விவசாயிகள் கலந்து கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம்,பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் தணிகைமலை, வார்டு உறுப்பினர் செல்லப்பன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பளாராக மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும் திட்டகுழு உறுப்பினர் சுந்தரம்மாள், நெமிலி ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், வெளிதாங்கிபுரம் மக்கள் அளித்த கோரிக்கை மனுவில்,'எங்கள் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளனர். இங்குள்ள விவசாயிகள் வங்கி கடன், பயிர் கடன் பெறவும், மாணவர்கள் கல்வி கடன் பெறவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி தேவைப்படுகிறது.மேலும், வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஏழை மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்ததிட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வங்கி கணக்கை துவக்க ஏதுவாக, இந்தியன் வங்கியின் கிளையை வெளிதாங்கிபுரத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் சத்யா நகரில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மாநகரப் பேருந்து பஸ் கண்டக்டராக கே.கே. நகர் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 24- ந் தேதி அசோக் நகர் பகுதியில் இருந்து கே.கே. நகர் பணிமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக அதே பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வரும் அலெக்சாண்டர் ராஜா என்பவர் ஏழுமலையின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார். அப்போது கே.கே. நகர் பணிமனையின் அருகில் ஏழுமலையின் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானது.

    ஏழுமலைக்கு அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 13-ந் தேதி வங்கி கணக்கில் இருந்து 800 ரூபாய் எடுக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி தனது செல்போனுக்கு வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் விசாரித்தார்.

    அப்போது வேறு ஒரு நபர் ஆதார் எண் மற்றும் ஏ.டி.எம். கார்டை காண்பித்து தனது பாஸ்புக் காணவில்லை என்றும் இதனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து 800 ரூபாயை எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. ஏழுமலையின் கை யெழுத்தை அலெக்சாண்டர் ராஜாவே போலியாக போட்டு பணம் கேட்டு உள்ளார். கையெழுத்தில் சந்தேகம் ஏற்படவே வங்கி அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். நீண்ட காலமாக தனது கையெழுத்து மாறி உள்ளதாகவும் தற்போது தான் நேரடியாக வங்கிக்கு வந்து பணம் எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஏழுமலை சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டார். அப்போதுதான் டிரைவர் அலெக்சாண்டர் ராஜா தனது பெயரில் போலியாக ஆதார் அட்டையில் புகைப் படத்தை மார்பிங் செய்து வங்கியில் கொடுத்ததும் அதேபோல் தனக்கு பாஸ்புக் இல்லை என்றும் புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி ஏழுமலையின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் தனக்கு கடன் வேண்டுமென இந்தியன் வங்கிக் கிளையில் கேட்டு அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து உள்ளார்.

    நேற்று மீண்டும் ஏழுமலைக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியன் வங்கி மூலம் பத்து லட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம் என வந்து உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    அதன் பிறகு ஏழுமலை நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக வங்கிக்கு வந்த அலெக்சாண்டர் ராஜாவை பிடித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லிப்ட் கேட்டபோது கீழே விழுந்த ஏழுமலையின் மணிபர்சில் இருந்து ஆவணங்களை எடுத்து அலெக்சாண்டர் ராஜா கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    • நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வங்கியின் கதவை உடைத்து உள்ளனர்.
    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகே இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஊழியர்கள் வழக்கம்போல் பணி முடிந்து வங்கியை பூட்டி விட்டு சென்றனர். 2 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலர்கள் வங்கிக்கு வந்தனர். அப்போது வங்கியின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மானாமதுரை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது வங்கியின் கிரில் கேட் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதும், மேலும் வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கதவு உடைந்திருந்தது.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வங்கியின் கதவை உடைத்து உள்ளனர். ஆனால் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளை முயற்சியை பாதியிலேயே கைவிட்டு சென்றதாக தெரிகிறது.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் கொள்ளை முயற்சி தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    முதல் கட்டமாக அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் பாதியிலேயே சென்றதால் பல கோடி ரூபாய் தப்பியது.

    ×