என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைக்கும் பணிகள்- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைக்கும் பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

    வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைக்கும் பணிகள்- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆய்வு

    • வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
    • வங்கியின் பணிகள் குறித்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

    கோவில்பட்டி:

    வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைப்ப தற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, இந்தியன் வங்கி பொதுமேலாளர் கணேஷ்ராம், மண்டல அலுவலர் ஜெயபாண்டியன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் வங்கியின் பணிகள் குறித்து எம்.எல்.ஏ., கேட்டறிந்தார். இந்த வங்கி சிறப்பாக செயல்பட வில்லிசேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஒத்துழைப்பார்கள் என எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் அழகர்சாமி, பழனிகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×