search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகர்  மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக ஆர்.நாகராஜ் மீண்டும் தேர்வு
    X

    மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா,பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த போது எடுத்த படம்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக ஆர்.நாகராஜ் மீண்டும் தேர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 5-வது அமைப்புத்தேர்தல் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கான 5-வது அமைப்புத்தேர்தல் திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக ம.தி.மு.க.தேர்தல் பணி துணைச்செயலாளர் அ.சேதுபதி, துணை ஆணையாளர்களாக கோவை மாநகர இளைஞரணி துணை செயலாளர் தங்கவேல், கோவை பகுதி செயலாளர் விஸ்வராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி மாநகர் மாவட்ட அவைத்தலைவராக நேமிநாதன், மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ், பொருளாளராக நல்லூர் மணி என்ற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினராக சக்திவேல், துணை செயலாளர்களாக குமார், தாமோதரன், வழக்கறிஞர் தமயந்தி கந்தசாமி, பூபதி, பொதுக்குழு உறுப்பினர்களாக சதீஷ்குமார், ராமசாமி, கவுரிசங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமையில் புதிய நிர்வாகிகள் உள்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் ரெயில்நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு சென்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். இதில் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.மணி, பல்லடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி உள்பட மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×