சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா

கொடியேற்று விழாவிற்கு சுப்பாராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தார்.
சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டில் ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார் வரவேற்று பேசினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தார்.

விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முகம்மது ஹக்கீம், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி, ஒன்றிய செயலாளர் சசி முருகன், நகர துணைச் செயலாளர் ராஜேஸ்வரி இசக்கியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கசாமி, அய்யனார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com