சேரன்மகாதேவி அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு வேன் மோதி முதியவர் பலி

சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 55). இவர் இன்று காலை புலவன்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சேரன்மகாதேவி அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு வேன் மோதி முதியவர் பலி
Published on

நெல்லை:

சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 55). இவர் இன்று காலை புலவன்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள சர்ச் அருகே சென்றபோது, எதிரோ வந்த மினி லோடு வேன் அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தர்மராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதேநேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி லோடு வேன் அப்பகுதயில் இருந்த தரைபாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் லோடு வேன் டிரைவரான வீரவநல்லூர் தம்பிரான் காலனியை சேர்ந்த காசிதுரை என்பவரது மகன் பிரவீனுக்கும்(20) வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பத்தமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, இறந்த தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த பிரவீனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com