திருச்சி காவிரி ஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

மனோகரன்தனது மனைவி தீபாவுடன் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். மனோகரன் தரிசனம் முடிந்து குளிப்பதற்காக அம்மா மண்டபம் காவிரி ஆற்றின் படித்துறைக்கு வந்துள்ளனர்.
திருச்சி காவிரி ஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி
Published on

திருச்சி :

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் மனோகரன்(62). இவர் தனது மனைவி தீபாவுடன் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர்.

தரிசனம் முடிந்து குளிப்பதற்காக அம்மா மண்டபம் காவிரி ஆற்றின் படித்துறைக்கு வந்துள்ளனர். மனோகரன் குளிப்பதற்காக காவிரி ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தீபா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com