என் மலர்
நீங்கள் தேடியது "kidnapped girl"
சேலம்:
சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் புதியதாக ஒரு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த கட்டுமான பணியில் சேலம் இரும்பாலை அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் (வயது 25) என்பவர் ஈடுபட்டு வந்தார்.
அப்போது ரமேஷ் பக்கத்து வீட்டில் வசித்து வரும் அந்த சிறுமியை பார்த்தார். அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.
முதலில் சாதாரணமாக பேச தொடங்கிய அவர் பின்னர் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினார். வேலைக்கு வரும்போ தெல்லாம் ரமேஷ் அந்த சிறுமியை தவறாமல் சந்தித்து பேசியதாக தெரிகிறது. இந்த பேச்சு நாளுக்கு நாள் அதிகமானது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி ரமேஷ், சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள் என்று கூறினார். அதற்கு அவர் மறுத்தார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ரமேஷ், சிறுமியை மிரட்டியதாக தெரிகிறது.
கடந்த 8-ந்தேதி வீட்டிற்கு சென்று அந்த சிறுமியை ரமேஷ் கடத்தி சென்று விட்டார். இது குறித்து பெற்றோர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தார்.
இதற்கிடையே ரமேஷ், சிறுமியை சித்தர் கோவிலுக்கு அழைத்துசென்று திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கேரளாவுக்கு அழைத்து சென்று சொகுசு விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனை தொடர்ந்து ரமேஷ் தனது நண்பர் மாதேஷ் என்பவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்தும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து 4 நாட்களாக வீட்டிற்குள் அடைத்து வைத்து செக்ஸ் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மாதேஷ் வீட்டிற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். ரமேசை பிடித்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டம், குழந்தைகள் தடுப்பு திருமணம் சட்டம் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறுமியை கடத்திச் சென்று கொத்தனார் 4 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கருங்கல்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள பவுஞ்சூரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மனைவி காளியம்மாள். நரிக்குறவர்கள். இவர்களது மகள் 2-வது மகள் ஹரினி கடந்த செப்டம்பர் 15-ந் தேதி கடப்பாக்கத்தில் நடந்த கோவில் தெருவில் வெங்கடேசன் குடும்பத்துடன் அங்கு கடை வைத்திருந்தார். பின்னர் அவர் குடும்பத்துடன் பவுஞ்சூர் கடை வீதியில் தூங்கினார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிறுமி ஹரினியை காணவில்லை. மர்ம நபர்கள் அவளை கடத்தி சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.
இதற்கிடையே கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, குழந்தையை பறிகொடுத்த நரிக்குறவர் தம்பதியை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் போலீசாரிடம் கூறும்போது, கடத்தப்பட்ட சிறுமியை போல் ஒருவரை மும்பையில் உள்ள ரெயில் நிலையத்தில் கண்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவுப்படி தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அவர்கள் மும்பை சென்று விசாரித்தனர்.
இந்த நிலையில் உத்திரமேரூர் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி ஹரினி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் அவளை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆனந்த கண்ணீரோடு சிறுமி ஹரினியை கட்டி அணைத்தனர். சிறுமி கடத்தலில் தொடர்புடையவர்களிடம் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்தபோது காணாமல் போனார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதில், தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டனர் என்று கூறி இருந்தனர்.
இந்த புகாரை அடுத்து போலீசார் கடத்தல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த சிறுமியை கடத்தி சென்றது அவரது உறவினரான ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ரமணா என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமி தானாகவே வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக எல்லைப் பிள்ளைச்சாவடியில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது டாக்டர்கள் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். அதில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலக்குழு ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை ரமணா கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.
இதன் மீது விசாரணை நடத்திய போலீசார் கடத்தல் வழக்கை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் (போக்சோ) வழக்காக மாற்றி ரமணவை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரமணா ரவுடியாக செயல்பட்டு வந்தார். அவர் மீது 2 கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆம்பூர்:
ஆம்பூர் மாராபட்டு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி இவர் வடச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.
சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி சம்பந்திகுப்பம் பகுதியை சேர்ந்த கெங்கையன் மகன் விக்ரமன் (வயது 22). என்பவர் எனது மகளை கதாலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருக்கலாம் என்று ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் நேற்று ஆம்பூர் ரெயில் நிலையத்தில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்து.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விக்ரமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்செவல்பட்டி விராமதி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மகாலட்சுமி (வயது 7). இவள் அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் மகாலட்சுமி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், திடீரென்று சிறுமி மகா லட்சுமியை பைக்கில் ஏற்றி கடத்திச் சென்று விட்டார்.
இது குறித்து தந்தை ஆறுமுகம் கீழச்செவல்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் குழந்தையை கடத்தியது புதுக்கோட்டை மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த சிங்கமுத்து மகன் ராமு (26) என்பது தெரியவந்தது.
இது குறித்து ராங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ராமுவை கைது செய்தனர். அவர் எதற்காக சிறுமியை கடத்தினார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.






