search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man arrested"

    • அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை தாக்கிய முதியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் முதியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன்ப ட்டியை சேர்ந்தவர் ராணியம்மாள் (வயது60). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஜெய க்கொடி (73). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவ த்தன்று அத்துமீறி ராணி யம்மாள் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்தனர்.

    தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (34). இவர் அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அழகுராஜா என்பவர் இட்லி கேட்டு ஓட்டலுக்கு வந்துள்ளார். இட்லி தீர்ந்துபோய்விட்ட தாக கண்ணன் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அழகுராஜா அவரை சட்டையை பிடித்து இழுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கேரளாவுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
    • சமூக விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நடிகர் பாக்யராஜ் நடித்த ருத்ரா திரைப்படத்தில் வங்கியில் கொள்ளையடிப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் நடிகர் பாக்கியராஜ் வங்கியில் கொள்ளையடித்து விட்டு, அந்த பணத்தை பேக்கில் எடுத்து செல்லாமல், தான் அணிந்திருக்கும் சட்டைக்கு மேல் அணியும் கோட்டுக்குள் வைத்து கடத்தி செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

    சினிமாவில் தான் இப்படி கடத்த முடியும் என்று நினைத்த வேளையில், நிஜமாகவே இதுபோன்றே சட்டைக்குள் தனி பாக்கெட்டுகள் அமைத்து, பணத்தை கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    கோவை-கேரள எல்லையான வாளையாரில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கேரள கலால் துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்கு அரசு பஸ் வந்தது. இந்த அரசு பஸ்சை கேரள கலால் துறை அதிகாரிகள் மறித்து, அதில் ஏறி அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் இருந்த முதியவர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் அணிந்திருந்த சட்டையும் வித்தியாசமாக காணப்பட்டது.

    இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த முதியவரை மட்டும் பஸ்சை விட்டு இறக்கி அருகே உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அங்கு வைத்து, அவரை முழுமையாக சோதனை செய்தனர். அவர் சாதாரண சட்டை, வேட்டி அணிருந்திருந்தார். ஆனால் அதற்குள் பாதுகாப்பு கவச உடை போன்று அணிந்திருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து அந்த நபரை சட்டையை கழற்ற சொல்லி, அந்த பாதுகாப்பு கவச உடையை பார்த்தனர். அப்போது, அதில் 20-க்கும் மேற்பட்ட தனித்தனி பாக்கெட்டுகள் இருந்தன.அந்த பாக்கெட்டுகளுக்குள் கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் பணம் இருந்தது.

    அதிர்ச்சியான அதிகாரிகள், வேறு எங்காவது இதுபோன்று பணத்தை மறைத்து வைத்து கடத்துகிறாரா என சோதனை செய்த போது, அந்த முதியவர் தனது கால் தொடையிலும் பணத்தை மறைத்து கடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் முதியவரிடம் இருந்து ரூ.24¾ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் யார்? எங்கிருந்து கடத்தி வருகிறார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தானாஜி யஷ்வந்த் என்பதும், இவர் கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்கு கமிஷன் அடிப்படையில் இந்த பணத்தை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    மேலும் எர்ணாகுளத்தில் தனது அடையாளத்தை வைத்து மற்றொரு நபர் அந்த பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து அதிகாரிகள், அவரை கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இவர் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டரா? அல்லது சமூக விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதியவர் ஒருவர் தனது உடல் முழுவதும் பணத்தை மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 30 மது பாட்டில்கள் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

    சென்னிமலை

    சென்னிமலை டவுன் பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரியா ரோந்து சென்று கண்காணித்து வந்தார்.

    அப்போது சந்தைப்பேட்டையில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 30 மது பாட்டில்கள் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் சென்னிமலை டவுன் பகுதி சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்த நாகராஜ் (58) என்பதும் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக அந்த பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • பாத்திரம் கொடுக்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார்.
    • போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் லெஸ்லி ரிச்சர்ட் (வயது 78). இவரது வீட்டு அருகே 5-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜான் லெஸ்லி ரிச்சர்டிடம், அந்த சிறுமியின் பாட்டி சில பாத்திரங்களை வாங்கி இருந்தார். அந்த பாத்திரங்களை ஜான் லெஸ்லி ரிச்சர்ட் வீட்டில் கொடுத்து விட்டு வரும்படி கூறி சிறுமியை பாட்டி அனுப்பி வைத்தார்.

    வீட்டில் ஜான்லெஸ்லி ரிச்சர்ட் மட்டும் தனியாக இருந்தார். பாத்திரம் கொடுக்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    அவரிடம் இருந்து சிறுமி தப்பி வெளியே ஓடி வந்தார். பின்னர் தனது பாட்டியிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.

    இதுதொடர்பாக பாட்டி, பிங்கர் போஸ்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் லெஸ்லி ரிச்சர்ட்டை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • காத்தவ ராயனை (60) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது இடுப்பில் துணிப்பையில் ஏராளமான புதுவை சாராய பாக்கெட்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
    • அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்து றையூர் கிராமத்தில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் ராம சாமி ஆகியோர் தீவிர சாராயம் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போதுஅந்த வழியாக வந்த திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தவ ராயனை (60) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது இடுப்பில் துணிப்பையில் ஏராளமான புதுவை சாராய பாக்கெட்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, நாமக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • இதை அடுத்து கதிராநல்லூர் பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கதிராநல்லூர் கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, நாமக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    இதை அடுத்து கதிராநல்லூர் பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கூட்டுறவு சங்கம் அருகே மாரிமுத்து என்பவர் வீட்டில் சோதனை செய்தனர்.

    இதில் 270 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், மாரிமுத்துவையும் கைது செய்தனர். 

    • சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில்மிஷம் செய்ததார்.
    • போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 75) இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில்மிஷம் செய்ததார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து எலவனுசூர் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் எலவனாசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எதுவும் அறியாத சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரான கண்ணனை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    • விளாத்திகுளம் அருகே பூதலபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு புகுந்த மர்மநபர் ஒருவர் ராஜாமணியை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
    • அந்த நபர் அதே பகுதியில் வசித்து வரும் பொன்னுச்சாமி(50) என்பவரையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பூதலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா மனைவி ராஜாமணி(வயது 68).

    இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு புகுந்த மர்மநபர் ஒருவர் ராஜாமணியை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அந்த நபர் அதே பகுதியில் வசித்து வரும் பொன்னுச்சாமி(50) என்பவரையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்ண

    இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் பூதலபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா(52) என்பவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். அதன்அடிப்படையில் அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    நான் எப்போதும் மது அருந்துவது கிடையாது. ராஜாமணி மறைமுகமாக ஒரு முறை என்னை திட்டியதால் எனக்கு அவமானமாக இருந்தது. சம்பவத்தன்று ராஜாமணி வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தேன்.

    அவ்வப்போது பிச்சையாவுக்கு ராஜாமணி உணவு வழங்கி வந்ததால் பிச்சையாவையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தேன். அதன்பின்னர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலையில் நாட்டுத்துப்பாக்கிகள் அதிகளவில் பயன்படுத்தப் படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • வன விலங்குகளை வேட்டையாடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலையில் நாட்டுத்துப்பாக்கிகள் அதிகளவில் பயன்படுத்தப் படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி தாழக்கடை பகுதியில் புனுகுபூனை வேட்டையாடப் பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி வன பாதுகாவலர் நாகையா தலைமையிலான அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதிைய சேர்ந்த முத்தன் (65) என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் புனுகுபூனையை வேட்டையாடி அதனை பாடம் செய்து வைத்திருந்தார்.

    இதனையடுத்து அவரை போலீசார் பிடித்து வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கி, 2 வெட்டரிவாள்கள், தோட்டா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் சிறுமலை வனச்சரகர் மகேந்திரன் முத்தனை கைது செய்து போலீஸ் காவலுக்கு அனுப்பி வைத்தார்.

    சிறுமலை பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் யாரேனும் வைத்திருந்தால் ஒப்படைக்க வேண்டும் எனவும், வன விலங்குகளை வேட்டையாடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர்.

    • தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆபரேஷன் கந்துவட்டி எனும் பெயரில் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • போலீசார் அங்கிருந்த 6 வங்கி காசோலை, 6 பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோவை

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆபரேஷன் கந்துவட்டி எனும் பெயரில் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கந்துவட்டி, ஆள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து ஆபரேஷன் கந்துவட்டி மூலம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

    வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குதல், பவர் எழுதி வாங்கி மிரட்டுதல், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பேரூர் இன்ஸ்பெக்டர் பர்வீன்பானுக்கு பேரூர் அடுத்த காளம்பாளையம் கோபாலபுரத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் அதிக வட்டி வாங்குவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது பதிவு செய்யாமல் நிதி நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    மேலும் பொதுமக்களிடம் அதிக வட்டி வசூல் செய்து வந்ததும், கடனுக்கு பணம் வாங்கியவர்களிடம் இருந்து கையெழுத்து போடப்பட்ட வங்கி காசோலை, பத்திரம் ஆகியவை பெற்று வைத்திருந்ததும் கண்டுப்பிடிக்கப்ட்டது.

    இதையடுத்து போலீசார் அங்கிருந்த 6 வங்கி காசோலை, 6 பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவனம் நடத்தி வந்த காளம்பாளையத்தை சேர்ந்த செந்தில் குமார் (வயது 51) என்பரை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வங்கமானூத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 70). அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று 10 வயது சிறுமியை மிட்டாய் தருவதாக தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அழுது கொண்டே சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் சேகரிடம் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜேம்சை போகசோ சட்டத்தில் கைது செய்தனர்.

    முத்தியால்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது57) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரனுக்கு தெரியவந்தது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தும்படி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தாவிடம் புகார் தெரிவித்திருந்தார்.

    அதனை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தும் படி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தா உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது உதயகுமார் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதையொட்டி போக்சோ சட்டத்தில் உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    ×