ஊட்டியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

பாத்திரம் கொடுக்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஊட்டியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
Published on

ஊட்டி,

ஊட்டி அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் லெஸ்லி ரிச்சர்ட் (வயது 78). இவரது வீட்டு அருகே 5-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று ஜான் லெஸ்லி ரிச்சர்டிடம், அந்த சிறுமியின் பாட்டி சில பாத்திரங்களை வாங்கி இருந்தார். அந்த பாத்திரங்களை ஜான் லெஸ்லி ரிச்சர்ட் வீட்டில் கொடுத்து விட்டு வரும்படி கூறி சிறுமியை பாட்டி அனுப்பி வைத்தார்.

வீட்டில் ஜான்லெஸ்லி ரிச்சர்ட் மட்டும் தனியாக இருந்தார். பாத்திரம் கொடுக்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

அவரிடம் இருந்து சிறுமி தப்பி வெளியே ஓடி வந்தார். பின்னர் தனது பாட்டியிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.

இதுதொடர்பாக பாட்டி, பிங்கர் போஸ்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் லெஸ்லி ரிச்சர்ட்டை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com