பண்ருட்டி அருகே சாராயம் கடத்திய முதியவர் கைது

காத்தவ ராயனை (60) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது இடுப்பில் துணிப்பையில் ஏராளமான புதுவை சாராய பாக்கெட்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி அருகே  சாராயம் கடத்திய முதியவர் கைது
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்து றையூர் கிராமத்தில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் ராம சாமி ஆகியோர் தீவிர சாராயம் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போதுஅந்த வழியாக வந்த திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தவ ராயனை (60) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது இடுப்பில் துணிப்பையில் ஏராளமான புதுவை சாராய பாக்கெட்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com