உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோவில் கைது

சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில்மிஷம் செய்ததார். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோவில் கைது
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 75) இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில்மிஷம் செய்ததார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து எலவனுசூர் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் எலவனாசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எதுவும் அறியாத சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரான கண்ணனை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com