என் மலர்
நீங்கள் தேடியது "girl molestation"
மதுரை:
அலங்காநல்லூர் அருகிலுள்ள கல்லாணை கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் வீரபாண்டி (வயது 19). இவர் சம்பவத்தன்று இரவு ராஜீவ்காந்தி தெருவில் வசிக்கும் அத்தை வீட்டுக்கு சென்றார்.
அங்கு அத்தை மகள் மட்டும் தனியாக இருந்தார். அவரிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அந்த சிறுமியை வீரபாண்டி கற்பழித்தார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த வீரபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
இதற்கு உடந்தையாக இருந்ததாக வாலிபரின் தாயார் கலாதேவி உறவினர் அங்குசாமி (63) ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). கைத்தறி நெசவாளர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ந் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
பாதிக்கப்பட்ட அச்சிறுமி அழுது கொண்டே சென்று தனது பெற்றோரிடம் கூறினால். இதனால் அதிர்ச்சிடைந்த அச்சிறுமியின் பெற்றோர், இது பற்றி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி சுந்தரத்தை கைது செய்தனர்.
மேலும் சுந்தரம் மீது கரூர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சுந்தரத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்) 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சுந்தரத்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வங்கமானூத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 70). அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று 10 வயது சிறுமியை மிட்டாய் தருவதாக தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அழுது கொண்டே சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் சேகரிடம் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜேம்சை போகசோ சட்டத்தில் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள மானாம்பதி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் அதே பகுதியை சேர்ந்த தம்பதியிடம் 16 வயது மகளை வீட்டு வேலைக்காக அழைத்து சென்றார்.
கடந்த வாரம் சிறுமி வீட்டிற்கு வந்த போது வேளாங்கண்ணியும், அவரது காதலன் அற்புதராஜும் தன்னை சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறினார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகார் பற்றி அறிந்ததும் வேளாங்கண்ணியும், அவரது காதலன் அற்புதராஜும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க டி.எஸ்.பி.மனோகரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய போது அவர்கள் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து உள்ளனர். இதனை வைத்தே சிறுமியை மிரட்டி தொடர்ந்து பலருக்கு பாலியலுக்காக அனுப்பி உள்ளனர்.
இதில் வேளாங்கண்ணி, அற்புதராஜுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் கும்பலாக இதேபோல் பலரை வேலைக்கு அழைத்து சென்று பாலியலில் ஈடுபடுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய வேளாங்கண்ணி, அற்புதராஜ் சிக்கினால்தான் இந்த விவகாரத்தில் மேலும் பல விவரங்கள் வெளியாகும். #girlmolestation
பொள்ளாச்சியில் பெண்களை கொடுமைப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெரம்பலூரிலும் அதே போன்று சம்பவம் நடந்துள்ளதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பல குடும்ப பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி, மிரட்டி ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர், போலி பத்திரிகையாளர் மற்றும் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வீடியோ மூலம் பதிவு செய்து வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இதில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கும்பலின் மிரட்டல்களுக்கு பயந்து தங்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ? என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் புகார் கொடுக்காமல் உள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, இந்த சம்பவங்களில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த விபரங்கள் வெளிவராமல் ரகசியம் காக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவிட்டார்.
அதன்பேரில் பெண்களை மானபங்கப்படுத்துதல் மற்றும் பாலியல் உறவில் கட்டாயப்படுத்துதல், ஆபாச வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படையினர், பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படி பாதிக்கப்பட்டிருப்பின் அவர்கள் மூலம் புகார் கொடுக்க செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
மேலும் புகாரில் கூறப்பட்ட ஆளுங்கட்சி பிரமுகர் யாரென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பெரம்பலூரிலும் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது57) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரனுக்கு தெரியவந்தது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தும்படி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தாவிடம் புகார் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தும் படி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தா உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது உதயகுமார் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதையொட்டி போக்சோ சட்டத்தில் உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தென்னம் புலத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் நேற்றும் அதே சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவர் மீது வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஏதும் அறியாத சிறுமியை 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பலாத்காரம் செய்தது சமூக அவலத்தை வெளிப் படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற மனநிலை உருவாக என்ன காரணம்? என்பதை ஆய்வு செய்து மாணவர்கள் நல்லொழுக்கம் கடைபிடிக்க பாடதிட்டங்களில் மாற்றம் தேவை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார்(வயது 39). இவர் பனியன் நிறுவனங்களில் இருந்து துணி பெற்று தைத்துக்கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.
இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9 வயதுடைய 4-ம் வகுப்பு மாணவி, வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர்.
இதை கவனித்த செந்தில்குமார் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து தனது வீட்டுக்குள் அழைத்துச்சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் சிறுமி அங்கிருந்து வெளியே வந்துள்ளாள்.
இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு சிறுமியின் பெற்றோர் இரவு வீடு திரும்பியுள்ளனர். சிறுமியும் தூங்கினாள். அதன் பிறகு அதிகாலையில் சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி, ஏட்டு வனஜா மற்றும் போலீசார், செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
வேலூர்:
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (எ) பாலாஜி (38). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார்.
மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வியிடம் புகார் அளித்தனர்.
போலீசார் பாலாஜி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் வேலூர் ஜெயிலில் பாலாஜி அடைக்கப்பட்டார்.
இவரை குண்டாசில் கைது செய்ய வேலூர் எஸ்.பி. பிரவேஷ்குமார் கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து பாலாஜியை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். நேற்று மாலை வேலூர் ஜெயிலில் உள்ள பாலாஜியிடம் குண்டர் சட்டத்தின் நகல் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சக்திவேல் (வயது 32). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
திருமணமாகாத இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வது, கேலி, கிண்டல் செய்வது என்று இருந்தார். பொதுமக்கள் கடுமையாக எச்சரித்தும் திருந்த வில்லை. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை ஏமாற்றி மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சக்திவேல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் சக்திவேலை அடித்து, உதைத்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் அவரது உறவினர்கள் வந்து ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் அழைத்து சென்று விட்டனர். சக்திவேல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல் காளிதாஸ் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும், கடந்த 2008-ம் ஆண்டு காசிவிஸ்வநாதன் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும் சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சக்திவேலை கடுமையாக தண்டிக்க தருணம் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆவுடையார்கோவில் அருகே உள்ள அடியார்குளம் பகுதியில் சக்திவேல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ், காசிவிஸ்வநாதன் ஆகியோர் மறித்தனர். அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து சக்திவேலை சரமாரியாக அடித்து, காலால் குரல் வளையை மிதித்தனர். இதில் மூச்சுத்திணறிய சக்திவேல் மயங்கினார். அவர் இறந்து விட்டதாக நினைத்து இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து சக்திவேலை மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட சக்திவேல் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிவிஸ்வநாதனை கைது செய்தனர். தலை மறைவான காளிதாசை தேடி வருகிறார்கள். உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திவேலை பழி வாங்க 10 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும், நேற்று இரவு சிக்கிக்கொண்டதால் தாக்கியதாகவும் காசிவிஸ்வ நாதன் போலீசில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் ஆவுடையார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை-கும்பகோணம் சாலையில் உள்ள திட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்(வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவர் மகேஸ்வரனிடம் சென்று தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மகேஸ்வரன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருடன் சென்று வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியிடம் முறைகேடாக பழகி அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகியதில் அவர் கர்ப்பமானது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மகேஸ்வரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.






