search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 10-ம் வகுப்பு மாணவர் கைது
    X

    வேதாரண்யத்தில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 10-ம் வகுப்பு மாணவர் கைது

    வேதாரண்யத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 10-ம் வகுப்பு மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தென்னம் புலத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் நேற்றும் அதே சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவர் மீது வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    ஏதும் அறியாத சிறுமியை 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பலாத்காரம் செய்தது சமூக அவலத்தை வெளிப் படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற மனநிலை உருவாக என்ன காரணம்? என்பதை ஆய்வு செய்து மாணவர்கள் நல்லொழுக்கம் கடைபிடிக்க பாடதிட்டங்களில் மாற்றம் தேவை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×