search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tailor arrest"

    திருப்பூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் டெய்லரை பெண்கள் வன்கொமை சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (30), இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து திருப்பூர், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மே நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று மதியம் மணிகண்டன், 22 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை தனது வீட்டின் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சத்தம் கேட்டு பெண்ணின் உறவினர்கள் மணிகண்டனை பிடித்து தர்ம அடி கொடுத்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமுருகன்பூண்டி போலீசார் மணிகண்டனை வடக்கு அனைத்து மக ளிர் போலீஸ் நிலையத் திற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வடக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை பெண்கள் வன்கொமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
    திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டெய்லரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார்(வயது 39). இவர் பனியன் நிறுவனங்களில் இருந்து துணி பெற்று தைத்துக்கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

    இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9 வயதுடைய 4-ம் வகுப்பு மாணவி, வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர்.

    இதை கவனித்த செந்தில்குமார் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து தனது வீட்டுக்குள் அழைத்துச்சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் சிறுமி அங்கிருந்து வெளியே வந்துள்ளாள்.

    இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு சிறுமியின் பெற்றோர் இரவு வீடு திரும்பியுள்ளனர். சிறுமியும் தூங்கினாள். அதன் பிறகு அதிகாலையில் சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி, ஏட்டு வனஜா மற்றும் போலீசார், செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    பள்ளிகொண்டா அருகே பள்ளி மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய டெய்லரை போலீசார் கைது செய்தனர்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32) டெய்லர். அப்பகுதியில் உள்ள பிளஸ்-1 மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தார்.

    பின்னர் அவர், அதனை மாணவியின் தாயாருடைய செல்போன் ‘வாட்ஸ்-அப்’பிற்கு அனுப்பி உள்ளார். இதைக்கண்டு மாணவியின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    அதையடுத்து சிறிது நேரத்தில் அவர், மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், ‘‘உனது மகள் குளிக்கும் படத்தை அழிக்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும், மேலும் இதுகுறித்து குடும்பத்தினர், போலீஸ் உள்பட யாருக்கும் தெரிவிக்க கூடாது.

    அவ்வாறு தெரிவித்தால் வீடியோவை ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்’’ என மிரட்டி உள்ளார். மேலும் பணத்தை உடனடியாக தாம் தெரிவிக்கும் இடத்துக்கு வந்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் செய்வது அறியாமல் திகைத்த மாணவியின் தாயார், சிறிது நேரத்துக்கு பின்னர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்.

    அதில், வீடியோ அனுப்பியது மணிகண்டன் என்பதை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்து மாணவி குளிக்கும் வீடியோவை போலீசார் அழித்தனர். கைதான மணிகண்டன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    ×