search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "woman molested"

  • பெண் எதிர்ப்பு தெரிவித்ததும் மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
  • குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை அணுகுவது மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயது திருமணமான பெண் நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த பெண்ணை ஆஸ்பத்திரியின் ஆண் செவிலியர் ஒருவர் அதிகாலை 3.30 மணியளவில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளார். முதலில் ஆபாச செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததும் மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

  குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை அணுகுவது மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக போலீசில் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவமனையின் ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டார்.

  • புதர் பகுதியில் சடலமாக முனிரத்தினம்மாவின் உடல் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

  ஓசூர்:

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா அருகேயுள்ள பேட்ராயன தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்னம்மா (வயது38). இவர் தனது தங்கை மகனை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சிக்காக சென்றார்.

  இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.

  இந்நிலையில், சுமார் இரவு 8 மணியளவில் பூதன ஹள்ளி பகுதியில் உள்ள ஒரு புதரின் அருகில் தலை, கை, கால்களில் பலத்த காயங்களுடன் சிறுவனின் அழுகை குரல் கேட்டதை அடுத்து அவனை மீட்ட குடும்பத்தினர் தொடர்ந்து முனிரத்தினம்மாவை தேடினர்.

  நீண்ட நேரமாக தேடியும் அவர் கிடைக்காததாலும், இருள் சூழ்ந்து விட்டதாலும் அவரை தொடர்ந்து தேட முடியாமல் வீட்டுக்கு திரும்பி விட்டனர்.

  பின்னர், மீண்டும் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, புதர் பகுதியில் சடலமாக முனிரத்தினம்மாவின் உடல் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  பின்னர் உடனே இதுகுறித்து பன்னார்கட்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  தொடர்ந்து போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

  இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • பலாத்கார வீடியோவை நண்பர் ஹரி என்பவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தனர்.
  • மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கல்யாண் துர்க் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் நேற்று அனந்தபூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

  ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் 5 பேர் என்னை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

  அப்போது பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

  இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டினர். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து பலாத்காரம் செய்தனர். உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர்.

  பலாத்கார வீடியோவை அவரது நண்பர் ஹரி என்பவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தனர். அவரும் வீடியோவை காட்டி என்னை வரவழைத்து பலாத்காரம் செய்தார்.

  இதுகுறித்து கல்யாண் துர்க் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

  இதுகுறித்து டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த சம்பவத்துக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  • ரோட்டில் இளம்பெண் ஒருவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஓடிவந்தார்.
  • திருவனந்தபுரம் போலீசார், ஆற்றிங்கல் சென்று அங்கு பதுங்கி இருந்த கிரணை கைது செய்தனர்.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பொதுமக்கள் சிலர் டீக்கடைக்கு செல்ல ரோட்டில் நடந்து சென்றனர்.

  அப்போது இளம்பெண் ஒருவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஓடிவந்தார். சத்தம் கேட்டு மக்கள் அந்த பெண்ணை நோக்கி ஓடினர். அவர் உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. நிர்வாணமாக இருந்த அவர் கைகளால் உடலை மூடியபடி ரோட்டில் விழுந்து அழுது புரண்டார்.

  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் இருந்து உடை வாங்கி கொடுத்தனர். அதனை அணிந்த பின்பு அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிய மக்கள், அவர் ஏன்? நிர்வாணமாக ஓடி வந்தார் என கேட்டனர்.

  அதற்கு அந்த பெண், திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த கிரண் என்ற வாலிபர், தன்னை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது ஆடைகளையும் கிழித்து எறிந்து விட்டதாகவும் கூறினார். அதிகாலையில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது தப்பி வந்ததாகவும் கூறினார்.

  இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது. அதன்பின்பு மகளிர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த கிரண் என்பது தெரியவந்தது.

  திருவனந்தபுரம் போலீசார், ஆற்றிங்கல் சென்று அங்கு பதுங்கி இருந்த கிரணை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் கிரண் வேலை பார்த்த நிறுவனத்தில் அந்த பெண்ணும் வேலை பார்த்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று முன்தினம், அந்த பெண், இன்னொருவருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த கிரண், அந்த பெண்ணை தன்னோடு வருமாறு அழைத்துள்ளார். முதலில் வரமறுத்த பெண், பின்னர், கிரண் கெஞ்சியதை பார்த்து அவருடன் சென்றுள்ளார். அங்கிருந்து அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த கிரண், கழக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு அழைத்து சென்றுள்ளார்.

  அங்கு அந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்ததோடு, அவரது ஆடைகளை கிழித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை செல்போனில் படமும் எடுத்துள்ளார். பின்னர் தன்னை தவிர வேறு யாருடனாவது பேசினால், ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

  அன்று இரவு முழுவதும் அந்த பெண்ணை குடோனில் அடைத்து சித்ரவதை செய்த கிரண், அதிகாலை நேரத்தில் தூங்கி உள்ளார். அந்த நேரத்தில் தான் அந்த பெண், குடோனில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளார். விசாரணையில் தெரியவந்த இந்த தகவல்களை தொடர்ந்து போலீசார் கிரணை கைது செய்தனர்.

  • நெல்லூர் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
  • தனியாக செல்லும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் நெல்லூரில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். இவரது சகோதரிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

  இதற்காக நெல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணின் சகோதரியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு துணையாக இளம்பெண் ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருந்து கவனித்து வந்தார். நேற்று சகோதரிக்கு மருந்து வாங்கி வரும்படி தெரிவித்தனர்.

  மருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு இளம்பெண் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டார். அவர் நெல்லூர் காந்தி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது.

  இளம்பெண்ணை பின்தொடர்ந்து ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.

  அவர்கள் இளம்பெண்ணின் அருகில் சென்று வழி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். அப்போது இளம்பெண் ஆட்டோவிற்கு அருகில் சென்று அவர்களிடம் பேசினார்.

  அந்த நேரத்தில் ரோட்டில் மக்கள் நடமாட்டம் இல்லை. திடீரென ஆட்டோவில் இருந்த கும்பல் இளம்பெண்ணை இழுத்து ஆட்டோவில் தூக்கி போட்டனர்.

  மேலும் அவர் சத்தம் போடாமல் இருக்க கைகளால் வாயை பொத்திக்கொண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டது. நெல்லூர் அடுத்த கோலக சாலையில் இளம்பெண்ணை கடத்திச் சென்றனர்.

  அங்குள்ள தனியார் பள்ளி அருகே பெரிய புதர் பகுதி உள்ளது. அந்த பகுதிக்கு இளம்பெண்ணை கொண்டு சென்றனர். அங்கு வைத்து 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

  மேலும் இளம்பெண்ணை அவர்களது நண்பர்களுக்கும் விருந்தாக்க முடிவு செய்தனர்.

  இளம்பெண்ணை கடத்தி வைத்திருப்பது குறித்து அவர்களது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

  இதனையடுத்து அவரது நண்பர்கள் 5 பேர் காரில் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்தனர்.

  இதனால் வலி தாங்க முடியாமல் இளம்பெண் கதறி அழுதார்.

  சத்தம் கேட்டு அந்தப்பகுதி வழியாக சென்ற சிலர் அங்கு வந்தனர். அவர்களை 9 பேர் கொண்ட கும்பல் மிரட்டி விரட்டி அடித்தனர்.

  அவர்களிடம் இருந்து தப்பிய பொதுமக்கள் இதுகுறித்து வேட்டையப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

  அதற்குள் இளம்பெண்ணை அங்கேயே போட்டுவிட்டு கும்பல் ஆட்டோ மற்றும் கார்களில் தப்பி சென்று விட்டனர். போலீசார் புதர் பகுதியில் இருந்து இளம்பெண்ணை மீட்டனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  மேலும் கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லூர் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

  அதில் ஆட்டோ மற்றும் கார்களின் பதிவு எண் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதனை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

  பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனியாக செல்லும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • சுரேந்தர் இளம்பெண்ணை தனியாக சந்தித்து அவரது திருமணத்தின்போது வசூலான ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 11 பவுன் நகை ஆகியவற்றை தர வேண்டும்.
  • இல்லையென்றால் தன்னுடன் இருந்த வீடியோவை வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

  அருப்புக்கோட்டை:

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி லட்சுமியாபுரத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கல்லூரியில் பி.எட்., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

  அப்போது அவருக்கும், அதே பகுதியில் மரக்கடை நடத்தி வரும் சுரேந்தர் (வயது27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுரேந்தர், கம்ப்யூட்டர் தொடர்பான சில தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி இளம்பெண்ணை தனது கடைக்கு அழைத்துள்ளார்.

  அதனை நம்பி கடைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்து மயக்கமடைந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு இளம்பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

  இதுபற்றி இளம்பெண் தனது தாயிடம் தெரிவித்ததால் அவர் தாய்மாமனுக்கு மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சுரேந்தர் இளம்பெண்ணை தனியாக சந்தித்து அவரது திருமணத்தின்போது வசூலான ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 11 பவுன் நகை ஆகியவற்றை தர வேண்டும். இல்லையென்றால் தன்னுடன் இருந்த வீடியோவை வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

  இதனால் பயந்து போன அந்த பெண் நகை மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது சுரேந்தர் அந்த பெண்ணிடம் ரூ. 20 பத்திரத்தில் சில உறுதி மொழிகளை எழுதி வாங்கியுள்ளார். மேலும் இளம்பெண்ணை தர்மபுரி மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு அழைத்துச்சென்று அங்கும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

  இது தொடர்பாக மாயமான இளம்பெண்ணின் தாய் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து எம்.ரெட்டியாபட்டி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்தநிலையில் கடத்தப்பட்ட இளம்பெண், சுரேந்தர் பிடியில் இருந்து தப்பி தனது தாய் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார்.

  இந்த நிலையில் சுரேந்தர் மாயமாகி விட்டதாக அவரது தந்தை எம்.ரெட்டியாபட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை தேடி வருகின்றனர்.

  • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லைலாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது.
  • லைலாவை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

  திருவட்டார்:

  திருவட்டாரை அடுத்த மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் (வயது 28). டிப்ளமோ என்ஜினீயர்.

  எட்வினின் தந்தை இறந்து விட்டார். அதன்பின்பு எட்வின் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்களின் பக்கத்து வீட்டில் உறவினர் கமலதாஸ் வசித்து வருகிறார்.

  கமலதாசின் மனைவி லைலா( 47). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் அவர்கள் கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் கமலதாசும், அவரது மனைவி லைலாவும் மட்டுமே இருந்தனர்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் லைலா தலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

  இந்த சம்பவம் குறித்து கமலதாஸ் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கமலதாஸ், வீட்டில் இல்லாத போது அவரது உறவினர் எட்வின், லைலா வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்தது. எட்வினை தேடிய போது அவர் தலைமறைவாகி இருந்தார்.

  இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லைலாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

  அப்போது ஏற்பட்ட தகராறில் லைலா தலையில் தாக்கப்பட்டு மயக்கம் அடைந்துள்ளார் என்று டாக்டர்கள் கூறினர். லைலாவை பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  இதில் லைலாவின் பக்கத்து வீட்டில் வசித்த உறவுக்கார வாலிபர் எட்வின் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் எட்வினை ஆற்றூர் கழுவன்திட்டை பகுதியில் வைத்து பிடித்தனர்.

  பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் லைலாவை தாக்கி, பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

  லைலாவின் கணவர் வீட்டில் இல்லாத போது அவர் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பேன். அங்கு அவர் தூங்கும் அழகை ரசிப்பேன். இதனை ஒருநாள் லைலா பார்த்து விட்டார். இதுபற்றி அவர் எனது தாயாரிடம் கூறி என்னை அவமானப்படுத்தினார்.

  இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தேன், என்றார்.

  போலீசார் எட்வினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லைலா, சிகிச்சை பலன் இன்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

  இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக எட்வினை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

  • திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றி வாலிபர் மணியரசு கற்பழித்ததாக தனது குற்றச்சாட்டில் பெண் கூறியுள்ளார்.
  • தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சென்னை:

  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் 27 வயது பெண் அங்கு பணிபுரியும் வாலிபர் மீது கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.

  திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றி வாலிபர் மணியரசு கற்பழித்ததாக தனது குற்றச்சாட்டில் அவர் கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • இளம்பெண்ணும், மலையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.
  • வாலிபரும், இளம்பெண்ணும் நேற்று இரவு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு தனியாக சென்றதாக தெரிகிறது.

  செங்கல்பட்டு:

  சென்னை சைதாப்பேட்டையில் தங்கி 21 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் ஆகும்.

  இந்த நிலையில் நேற்று இரவு அவர் செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தன்னை 4 பேர் கும்பல் கற்பழித்துவிட்டதாக அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார்.

  மேலும் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் தெரிவித்தார். இதுபற்றி அறிந்ததும் சாலவாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

  அப்போது இளம்பெண் போலீசாரிடம் கூறும்போது, செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை செல்வதற்காக காத்திருந்தேன். அப்போது அங்குவந்த 4 பேர் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்து தப்பி ஓடிவிட்டனர் என்று கூறினார்.

  இதையடுத்து போலீசார் இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் மேலும் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக கூறிவருகிறார். இதனால் போலீசார் கற்பழிப்பு குற்றம் நடந்ததா? என்ற முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

  அந்த இளம்பெண்ணும், மலையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர். நேற்று இரவு அவர்கள் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு தனியாக சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இளம்பெண் தனது நண்பர் உள்ளிட்ட 4 பேர் கற்பழித்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

  இதுதொடர்பாக சாலவாக்கம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு ரெயில் நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

  மேலும் இளம்பெண்ணும் தொடர்பில் இருந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் குறித்தும் தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இளம்பெண் எதற்காக செங்கல்பட்டு வந்தார் என்றும் விசாரணை நடக்கிறது.

  பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

  இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  சென்னைக்கு செல்வதற்காக செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் மகிழுந்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

  ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கடத்தி, பல கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறது என்றால், அதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

  பாலியல் வன்கொடுமை செய்தால், மிகக்குறைந்த காலத்தில் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாதது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பாலியல் குற்ற வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

  இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பொது இடங்களிலும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.