மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மீது பாலியல் புகார்- 6 பேருடன் சேர்ந்து பெண்ணை பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர்

கணவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கடந்த மே மாதம் இன்ஸ்பெக்டர் சுனுவை சந்தித்தேன். இன்ஸ்பெக்டர் வீட்டில் வைத்தும் கடவந்திரா என்ற இடத்தில் வைத்தும் சுனு உள்பட 6 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தனர்.
மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மீது பாலியல் புகார்- 6 பேருடன் சேர்ந்து பெண்ணை பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர்
Published on

திருவனந்தபுரம்:

ஊட்டிக்கு சிறுமியை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பாலியல் வழக்கில் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் கொச்சிமரடு பகுதியைச் சேர்ந்தவர் சுனு. கோழிக்கோடு கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள இவர் மீது தான் பாலியல் பலாத்கார புகார் எழுந்துள்ளது. கொச்சி திருகாக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் இந்த புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புகாரில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கடந்த மே மாதம் இன்ஸ்பெக்டர் சுனுவை சந்தித்தேன். அப்போது அவர் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டினார்.

தொடர்ந்து அவரது வீட்டில் வைத்தும் கடவந்திரா என்ற இடத்தில் வைத்தும் சுனு உள்பட 6 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். அவரது மிரட்டலுக்கு பயந்து அப்போது புகார் செய்யவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து திருகாக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று, கோழிக்கோடு சென்று இன்ஸ்பெக்டர் சுனுவை கைது செய்தனர். இளம்பெண்ணின் கணவரது நண்பர், கோவில் ஊழியர் உள்பட 3 பேரை வழக்கு தொடர்பாக போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான இன்ஸ்பெக்டர் சுனு, எர்ணா குளம் முளவு காடு இன்ஸ்பெக்டராக இருந்த போது, பி.டெக் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com