என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர் கைது"

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயி. இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் நிலையத்தில் ஆட்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக செல்வகுமார் கடையம் போலீஸ் நிலையத்தில் தினமும் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா போலீஸ்நிலையத்தில் வைத்து செல்வகுமாரிடம் வழக்கு தொடர்பாக பேசியுள்ளார். அப்போது வழக்கை சீக்கிரம் முடித்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை வெளியே எடுப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறிய அவர் அதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகளை செல்வகுமாரிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த நோட்டுகளை இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கணவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கடந்த மே மாதம் இன்ஸ்பெக்டர் சுனுவை சந்தித்தேன்.
    • இன்ஸ்பெக்டர் வீட்டில் வைத்தும் கடவந்திரா என்ற இடத்தில் வைத்தும் சுனு உள்பட 6 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    ஊட்டிக்கு சிறுமியை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பாலியல் வழக்கில் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் கொச்சிமரடு பகுதியைச் சேர்ந்தவர் சுனு. கோழிக்கோடு கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள இவர் மீது தான் பாலியல் பலாத்கார புகார் எழுந்துள்ளது. கொச்சி திருகாக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் இந்த புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புகாரில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கடந்த மே மாதம் இன்ஸ்பெக்டர் சுனுவை சந்தித்தேன். அப்போது அவர் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டினார்.

    தொடர்ந்து அவரது வீட்டில் வைத்தும் கடவந்திரா என்ற இடத்தில் வைத்தும் சுனு உள்பட 6 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். அவரது மிரட்டலுக்கு பயந்து அப்போது புகார் செய்யவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

    இதுகுறித்து திருகாக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று, கோழிக்கோடு சென்று இன்ஸ்பெக்டர் சுனுவை கைது செய்தனர். இளம்பெண்ணின் கணவரது நண்பர், கோவில் ஊழியர் உள்பட 3 பேரை வழக்கு தொடர்பாக போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான இன்ஸ்பெக்டர் சுனு, எர்ணா குளம் முளவு காடு இன்ஸ்பெக்டராக இருந்த போது, பி.டெக் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெளிநாட்டில் வாழும் நபர் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை அனுப்பி வைத்தார்.
    • பணத்தை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சுதாகர் நிலத்தை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

    அவர் ஐதராபாத்தில் இடத்தை வாங்கி வீடு கட்ட உள்ளதாக தனது நண்பர்களிடம் தெரிவித்து இருந்தார். இது குறித்து ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள சுதாகருக்கு தெரியவந்தது.

    வெளிநாட்டில் உள்ள நபரை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர் சுதாகர் ரெட்டி ஐதராபாத்தில் ரூ.5 கோடியில் குறைந்த விலையில் இடத்தை வாங்கி தருவதாகவும் முன்பணமாக ரூ.50 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

    தனது நண்பரான ராஜேஷ் என்பவர் மண்டல வருவாய் துறை அலுவலராக உள்ளதாகவும், அவரிடம் பேசி நிலத்தை முடித்து தருவதாக தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பிய வெளிநாட்டில் வாழும் நபர் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சுதாகர் நிலத்தை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த வெளிநாட்டில் வாழும் நபர் இதுகுறித்து வனஸ்தலிபுரம் போலீசில் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் மீது புகார் செய்தார். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தியதில் இன்ஸ்பெக்டர் சுதாகர் ரூ.50 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சுதாகரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர் ராஜேஷை தேடி வருகின்றனர்.

    பண மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது.
    • வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை திருமங்கலத்தில் தொழில் அதிபர் ஒருவரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட 6 போலீசார் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×