என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை பெண்"

    • மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தொழில் துறையில் நிபுணராக உள்ளார்.
    • உன் இடுப்பை காட்டு நான் உனக்கு ரூ.5 ஆயிரம் தருகிறேன் என்று வாலிபர் கூறினார்.

    மும்பை:

    மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தொழில் துறையில் நிபுணராக உள்ளார். சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் இரவில் வேலை வாய்ப்பு தொடர்பாக அவரை தொடர்பு கொண்டார். ஆனால் பேச்சுவார்த்தை நீடித்ததில் அவர் எதற்காக இந்த நேரத்தில் தொடர்பு கொண்டார் என்பதை அந்த பெண் புரிந்து கொண்டார். அதற்கேற்றார்போல்தான் அந்த வாலிபரும் பேசினார். அப்போது அந்த வாலிபர் திடீரென அவரிடம் உன் இடுப்பை காட்டு நான் உனக்கு ரூ.5 ஆயிரம் தருகிறேன் என்று கூறினார்.

    முதலில் அந்த வாலிபர் வேலை தேடுவது போல் தனது பயோ டேட்டா விவரங்களை எல்லாம் அதில் பதிவு செய்துள்ளார். பெண்கள் இதேபோல் சபல வாலிபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார்.

    பின்னர் அந்த பெண் உரையாடல் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட்டாக வெளியிட்டார். அப்போது அந்த வாலிபர் நான் மது குடித்து இருந்ததாகவும் இதனால் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாகவும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரினார்.

    • செந்தில்குமார் அந்த பெண்ணிடம் உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது, கோவை எப்போது வருவீர்கள் என்று கேட்டு உள்ளார்.
    • செந்தில்குமார் தனது பிறந்தநாளுக்கு காதலியை கோவைக்கு வருமாறு கூறினார்.

    கோவை:

    கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவருக்கும், மும்பையை சேர்ந்த 27 வயதான பெண்ணுக்கும் முகநூல் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் தங்கள் செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டு அடிக்கடி பேசினார்கள்.

    இதனால் அவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் செல்போன் மூலம் தினமும் பேசிக்கொண்டனர். அத்துடன் வீடியோ கால் மூலமாகவும் அடிக்கடி பேசி வந்தனர். இதற்கிடையே செந்தில்குமார் அந்த பெண்ணிடம் உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது, கோவை எப்போது வருவீர்கள் என்று கேட்டு உள்ளார்.

    அதற்கு அந்த பெண், முக்கியமான நிகழ்ச்சி என்றால் சொல்லுங்கள் நான் வருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில் செந்தில்குமாரின் பிறந்தநாள் வந்தது. இதற்காக அவர் தனது காதலியை கோவைக்கு வருமாறு கூறினார். இதையடுத்து பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக அந்த பெண் விமானம் மூலம் கோவை வந்தார்.

    பின்னர் 2 பேரும் பல இடங்களுக்கு சுற்றி பேசி மகிழ்ச்சியாக இருந்தனர். இரவில் அந்த பெண்ணை செந்தில்குமார், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் நான் உன்னைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    அத்துடன் அவர் அந்த பெண்ணிடம் இருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.70 ஆயிரத்தையும் பெற்றார். பின்னர் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. அத்துடன் அவர் அந்த பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேறு செல்போன் எண்ணில் இருந்து செந்தில்குமாருக்கு தொடர்பு கொண்டு பேசினாலும் அவர் பேசவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவை மாநகர் மேற்கு பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×