என் மலர்
நீங்கள் தேடியது "பெண் பாலியல் பலாத்காரம்"
- 35 வயது பெண் ஒருவர் கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
- இருநாளுக்குப் பின் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார்.
சண்டிகர்:
அரியானாவின் பானிபட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த 24-ம் தேதி தனது கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இரு நாளுக்குப் பிறகும் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கால் துண்டான நிலையில் சோனிபட் அருகே உள்ள மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விசாரணையில் அப்பெண் கூறியதாக போலீசார் தெரிவித்த விவரம் வருமாறு:
வீட்டில் இருந்து வெளியேறியதும் அந்தப் பெண் பானிபட் அருகே உள்ள ரெயில் நிலையம் ஒன்றில் சோகமாக அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அவரது கணவர் அனுப்பியதாக கூறி அறிமுகமானார்.
அதன்பின், ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் ஒன்றின் காலி பெட்டியில் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் 2 பேர் அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் விடாத அவர்கள், அவரை சோனிபட்டுக்கு கடத்திச் சென்றனர். அங்கே ரெயில் தண்டவாளத்தில் வீசினர். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் பெண்ணின் கால் சிக்கி துண்டானது என தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பானிபட் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
அரியானாவில் நடந்த இத்தகைய கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- நாளுக்குநாள் 2 வாலிபர்களின் தொல்லை அதிகரிக்கவே பெண் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை தேடிவந்தனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
அந்த பெண் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
சம்பவத்தன்று கள்ளக்காதல் ஜோடி மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில் பரதன் மற்றும் அவரது நண்பரும் அங்கு வந்தனர்.
பின்னர் அந்த வாலிபர்கள் 2 பேரும் அந்த பெண்ணை மிரட்டி கூட்டுபாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும், உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என அந்த பெண்ணை மிரட்டினர். இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்திய, எழில் பரதன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை தனியாக வரவழைத்து அடிக்கடி பாலியல் பாலாத்காரம் செய்து, பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் பணம் கொடுக்காததால் ஆபாச வீடியோவை எழில்பரதன் வாட்ஸ்-அப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
நாளுக்குநாள் அவர்களின் தொல்லை அதிகரிக்கவே அந்த பெண் கோட்டக்குப்பம் போலீசில் இது தொடர்பாக புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






