என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Gangrape"

    • 35 வயது பெண் ஒருவர் கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
    • இருநாளுக்குப் பின் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார்.

    சண்டிகர்:

    அரியானாவின் பானிபட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த 24-ம் தேதி தனது கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இரு நாளுக்குப் பிறகும் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கால் துண்டான நிலையில் சோனிபட் அருகே உள்ள மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    விசாரணையில் அப்பெண் கூறியதாக போலீசார் தெரிவித்த விவரம் வருமாறு:

    வீட்டில் இருந்து வெளியேறியதும் அந்தப் பெண் பானிபட் அருகே உள்ள ரெயில் நிலையம் ஒன்றில் சோகமாக அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அவரது கணவர் அனுப்பியதாக கூறி அறிமுகமானார்.

    அதன்பின், ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் ஒன்றின் காலி பெட்டியில் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் 2 பேர் அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் விடாத அவர்கள், அவரை சோனிபட்டுக்கு கடத்திச் சென்றனர். அங்கே ரெயில் தண்டவாளத்தில் வீசினர். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் பெண்ணின் கால் சிக்கி துண்டானது என தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக பானிபட் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

    அரியானாவில் நடந்த இத்தகைய கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • நிலப்பிரச்சனைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாலியல் சித்ரவதை நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
    • விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நிர்பயா சம்பவம் போன்று மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவரை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    காசியாபாத் ஆசிரமம் சாலையில் சாக்கு மூட்டையில் உயிரோடு பெண் ஒருவர் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், கொடூரமாக சித்ரவதை செய்யபபட்டதும் தெரியவந்தது.

    நந்த் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு சிலருடன் நிலப்பிரச்சனை இருந்ததும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த பாலியல் சித்ரவதை நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

    கடந்த ஞாயிறு அன்று தன் சகோதரர் பிறந்தநாள் விழாவை கொண்டாட வெளியில் சென்ற அந்த பெண், இரவு 9.30 மணியளவில் வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தம் வந்துள்ளார். பேருந்துக்காக காத்திருந்த அவரை, 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததுடன், மர்ம உறுப்பில் இரும்பு கம்பியால் குத்தி சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் அவரது கை, கால்களை கட்டி சாக்குமூட்டையில் வைத்து சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    இந்த விவகாரம் மாநில மகளிர் ஆணையத்திற்கு தெரியவர, பூதாகரமாக உருவெடுத்தது. மகளிர் ஆணையம் அழுத்தம் கொடுத்த நிலையில், காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. தன்னை சீரழித்த 5 பேர் குறித்த தகவலை பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    நிர்பயா சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் இப்போது நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×