என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train coach"

    • 35 வயது பெண் ஒருவர் கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
    • இருநாளுக்குப் பின் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார்.

    சண்டிகர்:

    அரியானாவின் பானிபட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த 24-ம் தேதி தனது கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இரு நாளுக்குப் பிறகும் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கால் துண்டான நிலையில் சோனிபட் அருகே உள்ள மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    விசாரணையில் அப்பெண் கூறியதாக போலீசார் தெரிவித்த விவரம் வருமாறு:

    வீட்டில் இருந்து வெளியேறியதும் அந்தப் பெண் பானிபட் அருகே உள்ள ரெயில் நிலையம் ஒன்றில் சோகமாக அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அவரது கணவர் அனுப்பியதாக கூறி அறிமுகமானார்.

    அதன்பின், ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் ஒன்றின் காலி பெட்டியில் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் 2 பேர் அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் விடாத அவர்கள், அவரை சோனிபட்டுக்கு கடத்திச் சென்றனர். அங்கே ரெயில் தண்டவாளத்தில் வீசினர். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் பெண்ணின் கால் சிக்கி துண்டானது என தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக பானிபட் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

    அரியானாவில் நடந்த இத்தகைய கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • ரெயில் பெட்டி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.
    • விபத்தால், யாருக்கும் காயம் இல்லை என தகவல்.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள உல்டா புல் என்ற இடத்தில் ரெயில் பெட்டி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று காலை சாலை வழியாக ரெயில் பெட்டியை ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென பிரேக் செயலிழந்ததால் விபத்துக்குள்ளானது.

    இதில் லாரி இரண்டாக உடைந்து, ரெயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தால், யாருக்கும் காயம் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பீகாரில் சாலை வழியாக கொண்டு சென்ற விமானம் மேம்பாலம் அடியில் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து, சாலையில் ரெயில் பெட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்வே துறையின், ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில், இந்திய ரெயில்வே துறைக்கான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கும் பெட்டிகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மின்சார ரெயில் பெட்டிகள், விரைவு ரெயில் பெட்டிகள், விரைவு ரெயில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், சுற்றுலாவுக்கான ரெயில் பெட்டிகள் மற்றும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்தியன் ரெயில்வே துறையின், ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐ.சி.எப். தொழிற்சாலை ஒவ்வொரு ஆண்டும் அதன் தயாரிப்பின் தரத்தை மேம்படுத்தி வருகிறது. ஐ.சி.எப். தொழிற்சாலையில் 1957-58-ம் காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 74 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வந்தே பாரத் ரெயில், டெமு ரெயில், அதிவேக விபத்து மீட்பு ரெயில், சொகுசு ரெயிலான மகாராஜா விரைவு ரெயில் என பல்வேறு வடிவமைப்பிலான ரெயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில், ஐ.சி.எப். இந்திய ரெயில்வே துறைக்கான 75 ஆயிரமாவது ரெயில் பெட்டி தயாரித்து சாதனைப்படைத்து உள்ளது. நிறுவனம் தொடங்கிய 68 ஆண்டுகளில், 75 ஆயிரம் ரெயில் பெட்டிகள் என்பது பெருமைமிகு சாதனை என்று இந்திய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இதில், 875 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளும் அடங்கும். ஐ.சி.எப். உருவாக்கிய 75 ஆயிரமாவது ரெயில் பெட்டியை ஐ.சி.எப். பொதுமேலாளர் சுப்பராவ், நேற்று பார்வையிட்டு, ரெயில் பெட்டியை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்த 75 ஆயிரமாவது ரெயில் பெட்டி, 69-வது வந்தே பாரத் ரெயிலுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை, ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 75 ஆயிரம் பெட்டிகளில் 752 வந்தே பாரத் ரெயில் பெட்டி, 12 வந்தே மெட்ரோ ரெயில் பெட்டி, 6 ஆயிரத்து 895 எல்.எச்.பி. குளிர்சாதன பெட்டிகளும், 8 ஆயிரத்து 152 சாதாரண எல்.எச்.பி. பெட்டிகளும் அடங்கும். மேலும், ஐ.சி.எப். தொழிற்சாலை தொடங்கியது முதல் 1955-2015-ம் ஆண்டு வரையில் 49 ஆயிரத்து 588 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆண்டு முதல் தற்போது வரையில் 25 ஆயிரத்து 412 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரெயிலில் தனியாக பயணம் செய்த கர்ப்பிணி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழகம் முழுவதும் ரெயில்வே மற்றும் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் தனியாக பயணம் செய்த கர்ப்பிணி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் ரெயில்வே மற்றும் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் பெண்கள் பெட்டி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 899 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தெரிவித்தார்.

    ×