search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா சிறுமிக்கு பாலியல் தொல்லை- குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
    X

    வாலாஜா சிறுமிக்கு பாலியல் தொல்லை- குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

    வாலாஜா அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (எ) பாலாஜி (38). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார்.

    மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

    சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வியிடம் புகார் அளித்தனர்.

    போலீசார் பாலாஜி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் வேலூர் ஜெயிலில் பாலாஜி அடைக்கப்பட்டார்.

    இவரை குண்டாசில் கைது செய்ய வேலூர் எஸ்.பி. பிரவேஷ்குமார் கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து பாலாஜியை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். நேற்று மாலை வேலூர் ஜெயிலில் உள்ள பாலாஜியிடம் குண்டர் சட்டத்தின் நகல் வழங்கப்பட்டது.

    Next Story
    ×