search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
    X

    7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

    குளித்தலை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). கைத்தறி நெசவாளர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ந் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    பாதிக்கப்பட்ட அச்சிறுமி அழுது கொண்டே சென்று தனது பெற்றோரிடம் கூறினால். இதனால் அதிர்ச்சிடைந்த அச்சிறுமியின் பெற்றோர், இது பற்றி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி சுந்தரத்தை கைது செய்தனர். 

    மேலும் சுந்தரம் மீது கரூர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சுந்தரத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்) 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சுந்தரத்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×