என் மலர்
செய்திகள்

வடமதுரை அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வடமதுரை அருகே மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வடமதுரை:
வடமதுரை அருகே குருந்தம்பட்டி பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 19). அய்யலூர் பகுதியில் உள்ள குளிர்பான கடையில் வேலை பார்த்து வருகிறார். இப்பகுதியில் உள்ள பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலகிருஷ்ணன், கடத்திச் சென்றார்.
இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. சிவக்குமார் உத்தரவின் பேரில் வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் 2 பேரையும் கரூர் அருகே மடக்கி பிடித்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். மேலும் சிறுமியை கடத்திய பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Next Story