search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student kidnapped"

    • வினோத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த போதை பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • பயந்துபோன வினோத்தின் தந்தை வங்கி மூலமாக ரூ.1.90 லட்சம் அனுப்பி வைத்து உள்ளார்.

    சென்னை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் வினோத் வனாஸ்வர். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்தார். அங்கு படிப்பை முடித்து விட்டு தமிழகத்துக்கு திரும்பிய வினோத் பழைய பல்லாவரத்தில் தங்கியுள்ளார். தற்போது மருத்துவ தேர்வுக்கான படிப்பை அவர் மேற்கொண்டு வருகிறார்.

    வினோத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த போதை பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வினோத்துக்கு ஏற்கனவே அறிமுகமான சங்கர் என்பவர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் போல நடித்து கடத்த திட்டமிட்டார். இதன்படி சங்கரும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து வினோத்தை டீ குடிக்க அழைத்துள்ளனர்.

    அப்போது திடீரென 2 பேர் சேர்ந்து வினோத்தை காரில் தூக்கி போட்டு கடத்திச் சென்றனர். அவர்கள் நாங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறி ஏமாற்றியுள்ளனர்.

    மருத்துவ மாணவனான வினோத்தின் தந்தைக்கு போன் செய்து உங்கள் மகனை கைது செய்துள்ளோம். சிறைக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.8 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

    இதனால் பயந்துபோன வினோத்தின் தந்தை வங்கி மூலமாக ரூ.1.90 லட்சம் அனுப்பி வைத்து உள்ளார். இந்த பணத்தை பறித்துக் கொண்ட 2 பேரும் 5 பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு மாணவர் வினோத்தை காரில் இறக்கி விட்டு தப்பினார்கள்.

    இதுபற்றிய புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவ மாணவரை கடத்திய வழக்கில் சங்கர் மற்றும் காரில் கடத்திய சிவா, பாஸ்கர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

    கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதத் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
    • போலீசார் மாணவியை தேடி செங்கல்பட்டு விரைந்து உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அவருக்கு பொற்றோர் ஆன்லையின் வகுப்பிற்காக செல்போன் வாங்கி தந்தனர். அதில் மாணவி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் செய்தார். பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களிடம் பேசி வந்தார்.

    அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்தநிலைய சம்பவத்தன்று காலை மாணவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் பல இடங்களில் தேடி பார்த்தனர். மாணவி கிடைக்கவில்லை.இதையடுத்து மாணவின் பெற்றோர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இன்ஸ்டாகிராம் நண்பர் செங்கல்பட்டு வாலிபர் கோவை வந்ததும், பின்னர் தொண்டாமுத்தூர் வந்து மாணவிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீசார் மாணவியை தேடி செங்கல்பட்டு விரைந்து உள்ளனர். அங்கு மாணவியை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டேகுப்பம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது பெண். இவர் காவேரிபட்டணம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ந்தேதி அன்று வீட்டில் தனது தந்தையிடம் மாணவி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பெற்றோர் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கிடைக்கவில்லை.

    இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தந்தை எனது மகளை கிருஷ்ணகிரி அருகேயுள்ள கட்லுக்குட்டப்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் இளவரசன் (வயது23) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
    ஊத்தங்கரையில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை கடத்திய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் கைதான 5 பேரை போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிளஸ் 2 படிக்கும் மாணவியை கடத்திய குற்றத்திற்காக 5 பேரை ஊத்தங்கரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் நத்தம் கோடியூர் பகுதியை சேர்ந்த திம்மையன் மகன் சிலம்பரசன் (23). அவரது நண்பர்களான ஓசூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (44), ஆனந்த் (41), சம்பத்குமார் (23), பிரேம்குமார் (36), ஆகிய 5 பேரும் பெங்களூருவில் பேனர் தயாரிக்கும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

    சிலம்பரசன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கடந்த புதன்கிழமை இரவு பள்ளி முடித்து விட்டு வீடு திரும்பிய மாணவியை கடத்தி சென்று ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    இது குறித்து பெண்ணின் தாய் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்,இது குறித்து ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டி தலைமையிலான போலீசார் மாணவியை கடத்தியவர்களை பிடித்து, அவர்கள் 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    வடமதுரை அருகே மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே குருந்தம்பட்டி பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 19). அய்யலூர் பகுதியில் உள்ள குளிர்பான கடையில் வேலை பார்த்து வருகிறார். இப்பகுதியில் உள்ள பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலகிருஷ்ணன், கடத்திச் சென்றார்.

    இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. சிவக்குமார் உத்தரவின் பேரில் வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் 2 பேரையும் கரூர் அருகே மடக்கி பிடித்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். மேலும் சிறுமியை கடத்திய பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    திருச்சியில் கல்லூரி மாணவியை கடத்திய காதலன் மீது மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மலைக்கோட்டை:

    திருச்சி கல்லுக்குழியை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது 17 வயது மகள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் மகளை பைக்கில் சென்று கல்லூரியில் விட்டுவிட்டு அழைத்து வருவது வழக்கம்.

    இதேபோல் கடந்த 16-ந் தேதி மகளை கல்லூரியில் கொண்டு சென்று விட்டுள்னார். பின்னர் மதியம் மகளை அழைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை காணவில்லை. ஏற்கனவே தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாலிபர் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இதனால் அவர் மகளை கடத்தியிருக்கலாம் என சந்தேகித்த சின்னப்பா கோட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கல்லூரி மாணவியை கடத்தியதாக, மாணவியின் காதலன் கவுதம், அவரது தந்தை ராஜா, தாய் ரத்தினா உறவினர் முரளி உள்ளிட்ட 4 பேர் மீது  வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் மாமனார் வீட்டிற்கு தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர். #Diwali #GroomArrested
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அவரை ஓசூர் பகுதியில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த மணி (26) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடந்த மே மாதம் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மணி மீது வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே பள்ளி மாணவியை கடத்தி சென்ற மணி அவரை கோவிலில் வைத்து திருமணம் செய்ததுடன் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி தனிக்குடித்தனம் நடத்திவந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த மாணவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் மணியை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அவரை தீபாவளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    மாமானரின் அழைப்பினை ஏற்ற மணி தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பதாசன் காட்டுவளவு பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் தீபாவளி தினமான நேற்று காலை புதுமாப்பிள்ளை மணி மாமனார் வீட்டில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடை அணிந்து தலை தீபாவளியினை கொண்டாட தயாராக இருந்தார்.

    அப்போது இளம்பெண்ணை கடத்தி சென்ற மணி வந்திருக்கும் தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் மாமானார் வீட்டில் மகிழ்ச்சிகரமாக தீபாவளி கொண்டாட தயாராக இருந்த மணியை கைது செய்து எடப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    தீபாவளி பண்டிகையினை கொண்டாட அனுமதிக்கும்படியும் பண்டிகை முடிந்து தானே நேரில் வந்து ஆஜராக தயாராக உள்ளதாகவும் மணி போலீசாரிடம் மன்றாடி கேட்டும் போலீசார் கேட்கவில்லை. மணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.#Diwali #GroomArrested
    காட்பாடியில் ரூ.1 கோடி கேட்டு மாணவரை கடத்திய வழக்கில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    காட்பாடி ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் டிஜோரமேஷ் (வயது 22). கல்லூரி மாணவரான இவரை கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி ஒரு கும்பல் ரூ.1 கோடி கேட்டு கடத்தியது. பின்னர் மாணவரை அந்த கும்பல் விடுவித்தது.

    இந்த நிலையில் டிஜோரமேஷின் வீட்டில் கடந்த 1-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச்சென்றனர்.

    அதில், 4 மோட்டார் சைக்கிள்கள், வீட்டில் இருந்த ஏ.சி.எந்திரம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த இரு சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த பாலா (23), கஞ்சாலூரைச் சேர்ந்த ரகீம் (21), காட்பாடி பாரதிநகரை சேர்ந்த சீனிவாசன் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மாணவர் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான மன்சூரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், காட்பாடி பகுதியில் பதுங்கியிருந்த மன்சூரை (34) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர் கடத்தலில் பிரபல ரவுடி ஜானிக்கு தொடர்பு உள்ளதா? அவர் எங்கு உள்ளார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ்காரரால் கடத்தப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவியை அனுப்பி வைத்துள்ளனர்.
    குளச்சல்:

    ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சமீபத்தில் பிளஸ்-2 படித்து முடித்தார். இதைத் தொடர்ந்து அவர் நர்சிங் படிக்க விரும்பியதால் குருந்தன் கோடு அருகே உள்ள கோவில்விளையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.

    மேலும் நர்சிங் படிக்கவும் அவர் விண்ணப்பம் செய்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டில் இருந்து அந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் இது பற்றி அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    அந்த மாணவியை அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடினார்கள். ஆனாலும் அவர் எங்குச் சென்றார் என்று தெரியவில்லை. இதைத் தொடர்ந்து குளச்சல் மகளிர் போலீசில் தனது மகளை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரும்படியும் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான மாணவி திடீரென குளச்சல் மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    இதைத் தொடர்ந்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மாணவி தான் மாயமானது பற்றி முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அந்த மாணவியும், நெல்லையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவியை அந்த போலீஸ்காரர் கடத்திச் சென்றதும், பிறகு போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த மாணவியை அவர் விட்டு விட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த மாணவியை நாகர்கோவிலில் உள்ள நல்வாழ்வு மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அந்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    4-ம் வகுப்பு மாணவி காரில் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்த 8 வயது சிறுமி கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டாள். ஆனால், அவள் பள்ளிக்கு செல்லவில்லை.

    சிதம்பரம் பகுதியில் சாலையோரம் தனியாக நின்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த அவளது உறவினர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நீ மட்டும் தனியாக இங்கு ஏன் நிற்கிறாய்? என்று கேட்டார்.

    அதற்கு, அந்த சிறுமி கூறும்போது, நான் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். என்னை ஒரு கும்பல் காரில் கடத்தினர். அந்த காரில் என்னை போல் 4 மாணவிகள் இருந்தனர்.

    காரில் இருந்த நான் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டேன். ஆனால், அதற்குள் அந்த கும்பல் காரை வேகமாக ஓட்டி வந்தனர்.

    சிதம்பரம் பகுதிக்கு வந்தபோது காரில் இருந்து நான் கீழே குதித்து தப்பினேன். பின்னர் அந்த கும்பல் காரை வேகமாக ஓட்டி தப்பி சென்று விட்டது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் அந்த சிறுமியை அழைத்து கொண்டு சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார்.

    இதையடுத்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவள் கொடுத்த தகவலின் பேரில் கடலூர், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியாக வரும் கார்களை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.

    உண்மையிலேயே இந்த சிறுமி கடத்தப்பட்டாளா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்கலாமா? என்று பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீட்டில் தனியாக இருந்த மாணவியை கும்பல் கடத்தி சென்று உள்ளது. இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் கும்பலை தேடி வருகிறார்கள்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் செவல்விளை தேவர் தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மகள் மஞ்சு (வயது 17) .பிளஸ்-2 முடித்துள்ள இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மஞ்சுவின் பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டனர். மஞ்சு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகேசன், மூர்த்தி, சிவா, சரவணன், கணேஷ், முத்துராஜ், யோகேஷ் ஆகிய 6 பேர் அங்கு வந்தனர்.

    வீட்டில் தனியாக இருந்த மஞ்சுவை அவர்கள் காரில் கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது மஞ்சு வீட்டில் இருந்த ரூ.12லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ.63ஆயிரம் ஆகியவற்றையும் கொண்டு சென்றுவிட்டனர். இது பற்றி மஞ்சுவின் தந்தை மாரியப்பன் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுவை கடத்திய கும்பல் காதல் விவகாரத்தில் கடத்தி சென்றார்களா? அல்லது நகை-பணத்தை அபேஸ் செய்யும் நோக்கில் கடத்தினார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக முருகேசன் உள்ளிட்ட 6 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடையநல்லூர் பகுதியில் சமீபகாலமாக மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

    தாயுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கோவிந்தசாலை நேரு நகரை சேர்ந்தவர் பழனிவேலு. இவர் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவரது மகள் காயத்ரி (16). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை தனலட்சுமி தனது மகள் காயத்ரியுடன் கடற்கரை சாலையில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு மொபட்டில் சென்றார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு வீட்டுக்கு செல்வதற்காக காயத்ரியை ஒரு இடத்தில் நிற்க சொல்லி விட்டு தன லட்சுமி மொபட்டை எடுத்து வர சென்றார். சிறிது நேரம் கழித்து தனலட்சுமி மொபட்டை எடுத்து கொண்டு வந்து பார்த்த போது மகளை காணாமல் தனலட்சுமி திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் காயத்ரி இல்லை.

    இதையடுத்து தன லட்சுமி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் காயத்ரியை யாரோ கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் உப்பளம் நேதாஜி நகர் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் தாஜேஸ்வரி (23). இவர் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த தாஜேஸ்வரியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் தாஜேஸ்வரி இல்லை.

    இதையடுத்து ஜெயராமன் தனது மகள் மாயமானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×