என் மலர்
செய்திகள்

X
திருச்சியில் கல்லூரி மாணவியை கடத்திய காதலன்
By
மாலை மலர்29 Nov 2018 8:35 PM IST (Updated: 29 Nov 2018 8:35 PM IST)

திருச்சியில் கல்லூரி மாணவியை கடத்திய காதலன் மீது மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மலைக்கோட்டை:
திருச்சி கல்லுக்குழியை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது 17 வயது மகள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் மகளை பைக்கில் சென்று கல்லூரியில் விட்டுவிட்டு அழைத்து வருவது வழக்கம்.
இதேபோல் கடந்த 16-ந் தேதி மகளை கல்லூரியில் கொண்டு சென்று விட்டுள்னார். பின்னர் மதியம் மகளை அழைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை காணவில்லை. ஏற்கனவே தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாலிபர் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மகளை கடத்தியிருக்கலாம் என சந்தேகித்த சின்னப்பா கோட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கல்லூரி மாணவியை கடத்தியதாக, மாணவியின் காதலன் கவுதம், அவரது தந்தை ராஜா, தாய் ரத்தினா உறவினர் முரளி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X