என் மலர்
நீங்கள் தேடியது "plus tow student"
தர்மபுரி:
தர்மபுரியை அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கா ததால் மாணவி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கோபால கிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந் தகுடி மேலையூர் கிராமம் சொக்கன்தொண்டார் காலனி பகுதியை சேர்ந்தவர் சவுந்திரன். இவரது மகள் சத்யா (வயது 16). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி சத்யா, சமீபத்தில் நடந்த தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை சவுந்திரன், மகளை கண்டித்து பேசினார். இதில் சத்யா மனமுடைந்து வேதனையுடன் இருந்து வந்தார்.
இதையடுத்து இன்று காலை 7.30 மணியளவில் சத்யா, வீடு அருகே உள்ள 100 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறினார்.
பின்னர் தொட்டியின் உச்சிக்கு சென்ற அவர் திடீரென மேலே இருந்து கீழே குதித்தார். இதில் சத்யாவுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடி அலறினார். சத்யாவின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டனர். பிறகு அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ் - 2 மாணவி குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாறு:
செய்யாறு அடுத்த பிரம்மதேசம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த 17 வயது மாணவன், வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்துவருகிறார். இந்த மாணவன் சரிவர படிக்காததால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதையடுத்து, கோபித்துக் கொண்டு மாணவன் வீட்டில் இருந்து கடந்த 27-ந் தேதி வெளியேறினார். எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது இதுவரை தெரியவில்லை.
இதுபற்றி, பிரம்மதேசம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து மாணவனை தேடி வருகின்றனர்.