என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி தலைமை ஆசிரியர்கள்"

    • அடுத்த முறை அவர்கள் சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • கோட்டூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான-2025 ஆண்டுக்கான அடைவு தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் மாவட்டத்தில் உள்ள 370 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் எந்த பாடத்தில் திறன் குறைந்து இருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்து, அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், 8-வது மாவட்டமாக திருவாரூரில் இன்று குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து, அடுத்த முறை அவர்கள் சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநில அடைவு திறனாய்வு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் பிராகரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக கோட்டூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இதனை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அவரவர் பயின்ற பள்ளிகளில் வழங்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அவ்வாறு பெறப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் பள்ளி மாற்றுச்சான்றிதழும் வழங்கப்பட இருந்ததால் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தங்கள் பெற்றோருடன் நேற்று வந்திருந்தனர்.

    பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்றிதழ்களை அங்கு பயின்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜூ வழங்கினார்.

    இதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
    ×