என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்திய அமைச்சர்
    X

    குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்திய அமைச்சர்

    • அடுத்த முறை அவர்கள் சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • கோட்டூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான-2025 ஆண்டுக்கான அடைவு தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் மாவட்டத்தில் உள்ள 370 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் எந்த பாடத்தில் திறன் குறைந்து இருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்து, அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், 8-வது மாவட்டமாக திருவாரூரில் இன்று குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து, அடுத்த முறை அவர்கள் சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநில அடைவு திறனாய்வு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் பிராகரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக கோட்டூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இதனை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×