என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
4-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
- பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தினார்.
- சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் உள்ள பள்ளியில் 9 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி நேற்று மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே அதே ஊரைச் சேர்ந்த வீரன் (30) மோட்டார் சைக்கிளில் வந்தார். சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஏன் நடந்து செல்கிறாய். மோட்டார் சைக்கிளில் உட்கார், பள்ளியில் விடுகிறேன் என்று கூறினார். இதனை நம்பி அச்சிறுமி மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார்.
பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தினார். சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதில் அச்சிறுமி கூச்சலிட்டார். அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தனர்.
கரும்புதோட்டத்தில் வீரனிடம் சிக்கியிருந்த சிறுமியை மீட்டனர். வீரனுக்கு தர்மஅடி கொடுத்து, கடலூர் மாவட்ட சிறார் உதவி மையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினர். அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வீரனை கைது செய்து போக்சோ வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை அவளது பெற்றோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.