என் மலர்
நீங்கள் தேடியது "arrested father"
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் 34 வயது கார் டிரைவர். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் டிரைவர் அடிக்கடி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மது போதையில் இருந்த அவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் பயந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாய் இது குறித்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை காங்கயம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது சைல்டு லைன் அலுவலர்களிடம் அந்த சிறுமி தனக்கு தனது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறினார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உதவியுடன் அந்த சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது தந்தை மீது புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அந்த சிறுமியின் தந்தையை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதானவர் கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது 14 வயது மகள் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனிமையில் இருந்த போது பாலமுருகன் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
தனது மகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படவே அவரது தாயார் ஜோதி விசாரித்துள்ளார். அப்போது தனது தந்தை தன்னிடம் நடந்து கொண்டதை கதறி அழுதவாறு கூறினார்.
மேலும் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் ஜோதி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை:
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் சுந்தரம். இவரது முதல் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது 12 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
முதல் மனைவியின் தங்கையை சுந்தரம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுந்தரம் மகளிடம் தவறாக நடந்து கொண்டார். இதை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
இரண்டு நாட்களாக மகள் என்றும் பாராமல் தவறான முறையில் நடந்து கொண்டதால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அக்கம் பக்த்தினர் கேட்டபோது நடந்த விவரத்தை சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை கைது செய்தனர்.