என் மலர்

    செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது
    X

    ஒட்டன்சத்திரத்தில் மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒட்டன்சத்திரத்தில் மகளை கர்ப்பமாக்கிய தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது 14 வயது மகள் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தனிமையில் இருந்த போது பாலமுருகன் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

    தனது மகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படவே அவரது தாயார் ஜோதி விசாரித்துள்ளார். அப்போது தனது தந்தை தன்னிடம் நடந்து கொண்டதை கதறி அழுதவாறு கூறினார்.

    மேலும் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் ஜோதி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×