search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goondas act"

    • கடந்த மாதம் 21-ந்தேதி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் செல்வராஜ் என்ற செல்லக்குட்டி மற்றும் சின்னதம்பி ஆகியோரை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்தனர்.
    • கலெக்டர் லட்சுமிபதி, 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம், உழவர் சந்தை அருகில் கடந்த மாதம் 21-ந் தேதி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, பாரதிநகரை சேர்ந்த பெருமாள் மகன்களான செல்வராஜ் என்ற செல்லக்குட்டி (வயது28) மற்றும் சின்னதம்பி (26) ஆகியோரை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இவ்வழக்கில் செல்லக்குட்டி மற்றும் சின்னதம்பி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் எஸ்.பி. பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் கலெக்டர் லட்சுமிபதி, 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் உட்பட 156 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • குண்டர் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    செய்யாறு தாலுகா மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மேல்மா கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாக கீற்றுக்கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட போராட்டங்கள் மூலமாக விவசாயிகள் நிலம் கையகப்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    குடியுரிமை, வாக்குரிமை சம்பந்தமான ஆவணங்களை செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகாவிடம் அளிக்க செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முகப்பு வாயிலில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    தொடர்ந்து அன்று மாலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவித்தும், மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த சப்-கலெக்டர் அனாமிகா அங்கு வந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றார். இதற்கிடையே, அனுமதி இன்றி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கடந்த 4-ம் தேதி அதிகாலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருள் (45) உள்பட 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரை பேரில் கலெக்டர் பா.முருகேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 பேரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து ஊத்தங்கரை தாலுகா அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருள் (45), தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவன் (45), மணிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சோழன் (32), மேல்மா கிராமத்தைச் சேர்ந்த திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி, குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் (38) ஆகிய 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

    விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது ஏன் என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள். அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    • அடிதடி வழக்கில் ஈடுபட்ட வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • வெங்கடேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    முக்கூடல்:

    முக்கூடல் பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட தென் திருப்புவனம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவர் கொலை, கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டும், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் முக்கூடல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னபூரணிக்கு புகார்கள் வந்தது. அதன்படி வெங்கடேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு, இன்ஸ்பெக்டர் அன்ன பூரணி வேண்டுகோள் விடுத்தார்.

    அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பர சன் பரிந்துரையின்படி, நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், வெங்கடேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து வெங்கடேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பிரதீப் மீது அடிதடி, களவு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • கொலை மிரட்டல் வழக்கில் பாளை மத்திய சிறையில் பிரதீப் அடைக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பிரதீப் (வயது24). இவர் மீது போலீஸ் நிலையங்களில் அடிதடி, களவு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கொலை மிரட்டல் வழக்கில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு பரிந்துரைத்தார். தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் பிரதீப் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    • நெல்லை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • தொடர் வாகன தணிக்கை செய்யப்பட்டதோடு ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை, குற்றப்பதிவேடு பின்னணி உடையவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப் படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், அதனை தடுக்க நெல்லை மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கைது நடவடிக்கை

    தொடர் வாகன தணிக்கை செய்யப்பட்டதோடு ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை, குற்றப்பதிவேடு பின்னணி உடையவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப் படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ரவுடிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போக்சோ குற்றவாளிகள், தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட்டு வருபவர்கள், கொலை வழக்குகளில் தொடர்புடை யவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    சைபர் கிரைம்

    அதன்படி நெல்லை மாநகர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்தல், கொள்ளை, சைபர் கிரைம், போக்சோ உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என 52 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 9 மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையத்து ரூரல், நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களில் காவல்துறை அதிகாரிகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை யின் கீழ் மொத்தமாக 132 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மொத்தமாக நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின்படி 184 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
    • கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் சர்மியான் சாகிப் வீதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவரது சொந்த ஊர் மதுரை ஆரப்பாளையம் ஆகும்.

    அழகர்சாமி மீது தெற்கு, அனுப்பர்பாளையம், சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தையும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.

    அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 46 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி சினிமா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (35), இவர் கடந்த மே மாதம் 28-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்ற வீராணத்தை சேர்ந்த முருகன் என்பவரை வழி மறித்து மிரட்டி ரூ.450-ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள்கள் திருட்டு உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபட்டதும், பாண்டியன்மீது சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் இதனால் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

    இந்நிலையில் பாண்டியன் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என டவுன் போலீசார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சேலம் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

    • தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதால் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர்.
    • வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    சேலம்:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள வியாசராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 33). இவர் தற்போது சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி தெருவில் வசித்து வருகிறார்.

    செவ்வாபேட்டை போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதால் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். அதனை ஏற்று போலீசார் கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் உள்ள அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான உத்தரவு நகலும் அவரிடம் வழங்கப்பட்டது.

    • மாநகர போலீஸ் கமிஷனர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையிலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை கோவை சிறையில் உள்ள சரவணனிடம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • லிப்ட் கேட்டு பணம் - நகையை கொள்ளையடித்த வழக்கில் கணேசன் என்ற முனிய கணேசன் கைது செய்யப்பட்டார்.
    • கணேசன் என்ற முனிய கணேசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் காரில் லிப்ட் கேட்டு பணம் - நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கணேசன் என்ற முனிய கணேசன் (வயது23) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன். மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கணேசன் என்ற முனிய கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பக்கிரிசாமியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்தார்.

    இவர் தனது பள்ளியில் படிக்கும் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பள்ளி தாளாளர் பக்கிரிசாமி கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், பள்ளி தாளாளர் பக்கிரிசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பக்கிரிசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்தார். 

    • அஜித்குமாா் என்ற வாலிபர் கடந்த ஜனவரி 5 ந் தேதி கொலை செய்யப்பட்டாா்.
    • குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் வாலிபர் கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா் கல்லாம்பாளை யத்தில் அஜித்குமாா் (வயது 24) என்ற வாலிபர் கடந்த ஜனவரி 5 ந் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

    இதில் திருப்பூா் ராயபுரத்தை சோ்ந்த ஷாஜகான் (25), கோவை மூகாம்பிகை நகரை சோ்ந்த வல்லரசு (22), திருப்பூா் கல்லூரி சாலையை சோ்ந்த கணேஷ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.இந்த 3 பேரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவா்க ளை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.

    இந்த உத்தரவுக்கான நகலை கோவை சிறையில் உள்ள 3 பேரிடமும் போலீசாா் வழங்கினா்.

    ×