search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tobacco seller"

    • மாநகர போலீஸ் கமிஷனர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையிலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையிலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை கோவை சிறையில் உள்ள சரவணனிடம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேனி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி, ஜூலை.16-

    தேனி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தேனி அருகே பழனிசெட்டிபட்டி போலீசார் ஜவகர்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முத்துராம்(36) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து புகையிலைபொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு அரசு தடைவிதித்துள்ளது
    • நத்தம் பகுதியில் புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    செந்துறை:

    நத்தம் முஸ்லிம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் (35).

    இவர் நத்தம் அவுட்டர் செந்துறை சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வருவதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் டீக்கடையை சோதனை செய்தனர்.அப்போது 30 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்து அலாவுதீனை போலீசார் கைது செய்தனர்.

    ×