ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார். டிஜிபி அலுவலக வாயிலில் நடந்த மோதல் சம்பவத்தில் ஏர்போர்ட் மூர்த்தி கைதானார்.
ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இதனால் சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com