என் மலர்
நீங்கள் தேடியது "animal shelter"
- தான் விலங்குகளைத் திருடவில்லை என்றும், அவற்றை கொடுமையான சூழ்நிலையிலிருந்து மீட்டதாகவும் வாதிட்டார்.
- இந்த குற்றங்களுக்காக ரோசன்பெர்க்குக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோ ரோசன்பெர்க் (23 வயது). இவரது தந்தை கால்நடை மருத்துவர் என்பதால் சுமார் 40 ஏக்கரில் பூனை, நாய் என வளர்ப்பு விலங்குகளுக்கு மத்தியில் வளர்ந்தார்.
கல்லூரியில் பயின்று வரும் ரோசன்பெர்க் Direct Action Everywhere என்ற விலகுங்கள் நல குழுவில் செயல்பட்டு வருகிறார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நள்ளிரவில், ரோசன்பெர்க் மற்றும் அவரது குழுவினர், வட கலிபோர்னியாவில் உள்ள இறைச்சி ஆலைக்குள் தொழிலாளர்கள் போல் வேடமிட்டு நுழைந்தனர். அங்கிருந்த ஒரு லாரியில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளில் இருந்து நான்கு கோழிகளை எடுத்துச் சென்றனர். குழுவினர் இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.
இதன் பின் அவர் மீதும் அவரது குழுவினர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், தான் விலங்குகளைத் திருடவில்லை என்றும், அவற்றை கொடுமையான சூழ்நிலையிலிருந்து மீட்டதாகவும் ரோசன்பெர்க் வாதிட்டார்.
இந்நிலையில் அத்துமீறி நுழைதல், வாகனத்தை சேதப்படுத்த முயற்சி செய்தல், மற்றும் சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த குற்றங்களுக்காக ரோசன்பெர்க்குக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
ரோசன்பெர்க்கின் வழக்கறிஞர்கள், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
- தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் பசுவை ஒரு விலங்காக கருதுவதில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
விஞ்ஞான் பவனில் நடந்த ஒரு நிகழ்வில் பேசுய மோடி, "சமீபத்தில், நான் சில விலங்கு பிரியர்களைச் சந்தித்தேன்" என்று கூற அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து பிரதமர் மோடி சிறிது நேரம் நின்று கூட்டத்தினரிடம், "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? நம் நாட்டில் பல விலங்கு பிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பசுவை ஒரு விலங்காகக் கருதுவதில்லை" என்று கூறினார்.
- வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
- பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு, 20 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
சாலைகள், தெருக்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் கால்நடைகள், விலங்குகளை பராமரிக்கும் வகையில், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள் மற்றும் பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு, 20 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. தெருவில் திரியும் தெருநாய்களை ஓரிடத்தில் வைத்து, அவற்றுக்கு கால்நடை டாக்டர்களை கொண்டு கருத்தடை செய்வது, அவற்றை பிடித்த இடத்திலேயே கொண்டு சென்று சேர்ப்பது, காயம் அடைந்து தெருவில் திரியும் நாய்களுக்கு சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட பல பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளை மேற்கொள்ள மாவட்டம் வாரியாக பிரத்யேக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி, அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என அரசின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.






