என் மலர்
நீங்கள் தேடியது "விலங்குகளுக்கு காப்பகம்"
- வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
- பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு, 20 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
சாலைகள், தெருக்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் கால்நடைகள், விலங்குகளை பராமரிக்கும் வகையில், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள் மற்றும் பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு, 20 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. தெருவில் திரியும் தெருநாய்களை ஓரிடத்தில் வைத்து, அவற்றுக்கு கால்நடை டாக்டர்களை கொண்டு கருத்தடை செய்வது, அவற்றை பிடித்த இடத்திலேயே கொண்டு சென்று சேர்ப்பது, காயம் அடைந்து தெருவில் திரியும் நாய்களுக்கு சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட பல பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளை மேற்கொள்ள மாவட்டம் வாரியாக பிரத்யேக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி, அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என அரசின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.






