என் மலர்
இந்தியா

'தெருநாய்' விவகாரம்: விலங்கு நல ஆர்வலர்கள் 'பசு'வை ஒரு விலங்காக கருதுவதில்லை - பிரதமர் மோடி
- தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் பசுவை ஒரு விலங்காக கருதுவதில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
விஞ்ஞான் பவனில் நடந்த ஒரு நிகழ்வில் பேசுய மோடி, "சமீபத்தில், நான் சில விலங்கு பிரியர்களைச் சந்தித்தேன்" என்று கூற அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து பிரதமர் மோடி சிறிது நேரம் நின்று கூட்டத்தினரிடம், "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? நம் நாட்டில் பல விலங்கு பிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பசுவை ஒரு விலங்காகக் கருதுவதில்லை" என்று கூறினார்.






