என் மலர்
நீங்கள் தேடியது "Panchayat elections"
- பாண்டுரங்கிற்கு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசை இருந்தது.
- மராட்டியத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை உள்ளது.
மும்பை:
தெலுங்கானா மாநிலம், நிசாம்பாத் மாவட்டம் எடப்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கால்வாயில் மிதந்த சிறுமி உடலை மீட்டனர். போலீசார் சிறுமியின் படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அவளது குடும்பத்தினரை தேடினா்.
இந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட சிறுமி மராட்டிய மாநிலம், நாந்தெட் மாவட்டம் கேருர் கிராமத்தை சேர்ந்தவள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிறுமியின் தந்தை பாண்டுரங்கிடம் (வயது28) விசாரணை நடத்தினர். அப்போது பாண்டுரங் பெற்ற மகளை கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
பாண்டுரங் கேருரில் முடி திருத்தும் தொழிலாளியாக உள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் மற்றும் 3 வயதில் மகன் உள்ளார். பாண்டுரங்கிற்கு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசை இருந்தது. மராட்டியத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை உள்ளது.
எனவே அவர் இதுகுறித்து அங்கு பஞ்சாயத்து தலைவராக உள்ள நண்பர் கணேஷ் ஷிண்டேவிடம் பேசினார். அப்போது அவர்கள் இரட்டை பிள்ளைகளில் மூத்தவளான பிராச்சியை(6) தத்து கொடுப்பது அல்லது கண்ணுக்கு எட்டாத தொலைவுக்கு சென்று விட்டுவிடுவது என்பது பற்றியெல்லாம் யோசித்தனர். பின்னர் இதில் எதுவும் சரிவராது என்று நினைத்து கொலை செய்ய துணிந்தனர்.
இதன்படி சம்பவத்தன்று பாண்டுரங் மோட்டார் சைக்கிளில் மகள் பிராச்சியை மராட்டிய எல்லையில் உள்ள தெலுங்கானா மாநிலம் எடப்பள்ளியில் உள்ள கால்வாய்க்கு அழைத்துச்சென்றார். அவர் அங்கு சிறுமியை கால்வாயில் தள்ளிவிட்டு ஊருக்கு திரும்பிவிட்டார் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பாண்டுரங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய பாண்டுரங்கின் நண்பரான பஞ்சாயத்து தலைவர் கணேஷ் ஷிண்டேவையும் கைது செய்தனர்.
தேர்தலில் போட்டியிடும் மோகத்தில் பெற்ற மகளை முடி திருத்தும் தொழிலாளி கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வாக்குறுதி அளித்தனர்.
- கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்குபதியப்பட்டது.
தெலுங்கானாவில் உள்ள கிராமங்களில் சுமார் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ள ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, பஞ்சாயத்து தலைவர்கள் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது.
பஞ்சாயத்து தலைவர்கள் இருவரை வாடகைக்கு அமர்த்தி, தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி அவற்றைக் கொன்றுள்ளனர். பின்னர் அந்த உடல்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் குழிதோண்டிப் புதைத்துள்ளனர்.
விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், இதில் ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களின் கணவர்கள், பஞ்சாயத்துச் செயலாளர்கள் மற்றும் நாய்களைக் கொன்ற கூலி ஆட்கள் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் தெலுங்கானா முழுவதிலும் உள்ள பல்வேறு கிராமங்களில் இதேபோல 900 நாய்கள் கொல்லப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

341 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1798 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5575 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2714 வாக்குச்சாவடிகள் (காஷ்மீர் 576, ஜம்மு 2138) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 892 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 912 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். #JKPanchayatPolls #PanchayatElection



மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் துவங்குவதற்கு முன்பிருந்தே மாநிலத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. நேற்று முன்தினம் வாக்குப்பதிவின்போதும் வன்முறை தொடர்ந்தது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றியது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின. மாநிலம் முழுதும் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 43 பேர் படுகாயம் அடைந்தனர்.
வன்முறை தொடர்பாக சுயேட்சை வேட்பாளர்கள் மாநில தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார்களை அடுக்கினர். இதைத்தொடர்ந்து மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன் அடிப்படையில், ஹூக்ளி மாவட்டத்தில் 10 வாக்குச்சாவடிகள், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 28 வாக்குச்சாவடிகள், கூச் பெஹார் மாவட்டத்தில் 52 வாக்குச்சாவடிகள், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 63 வாக்குச்சாவடிகள், நாடியா மாவட்டத்தில் 60 வாக்குச்சாவடிகள், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 59 வாக்குச்சாவடிகள், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 26 வாக்குச்சாவடிகள், மால்டா மாவட்டத்தில் 55 வாக்குச்சாவடிகள், உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் 73 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 568 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #Panchayatelections #Repoll
மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. அம்மாநிலத்தின் தென் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கச்சராபாரி பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரையும் கலவரக்காரர்கள் எரித்துக் கொன்றுள்ளனர்.
மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேவபிரசாத் தாஸ் மற்றும் அவருடைய மனைவி உஷா ஆகியோர் எரித்து கொல்லப்பட்டதாக மாவட்ட மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஷமிக் லஹிரி தெரிவித்துள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஷமிக் லஹிரியின் இந்த குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர், மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார். வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுந்தர்வன கடலோர காவல்துறை எஸ்.பி. தெரிவித்துள்ளார். #WestBengalPolls #PanchayatElections #WestBengalViolence
மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengalPolls #panchayatelections






