என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interim stay"

    • கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார்.
    • நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    மதுரை:

    மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மதுரை ஐகோர்ட் டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 1978-ம் ஆண்டிலேயே அர சாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள்.

    இத்தனை ஆண்டுகளாக தெருக்கள் சாலைகளில் சாதி பெயர்கள் இருப்பதால் பிரச்சனை ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போதைய ஆளுங்கட்சி மக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது, பிளவுபடுத்துவதன் நோக்கமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதன் மூலம் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைக்க விரும்புகிறார்கள். இவ்வாறு தெருக்கள், சாலைகளின் பெயர்களை மாற்றுவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் இருப்பிட சான்றுகளில் முகவரியை பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும்.

    இந்த அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடியிருப்பு பகுதி, சாலைகள், தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதற்கு வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    ஏற்கனவே இது தொடர்பான விசாரணை நடந்தபோது, இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை பழைய பெயர்களை நீக்குவது, புதிய பெயர்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது எனவும், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    இதன்மூலம் தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்குவற்கு ஏற்கனவே ஐகோர்ட்டு விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசின் ஆட்சேபத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
    • வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

    இந்நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    துணைவேந்தர் நியமன அதிகாரம் விவகாரத்தில் தமிழக அரசின் ஆட்சேபத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

    இடைக்கால தடை விதிக்கக்கூடாது என தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தடை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

    இதைதொடர்ந்து, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாக ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீஸார் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த பிப்.17-ம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

    மேலும், கருக்கலைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால், சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென வளசரவாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி போலீஸார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில் இன்று, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

    நடிகை விவகாரத்தில் சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகை விவகாரம்- மோசடி, வல்லுறவு புகார் வழக்கை ரத்து செய்ய கோரும் சீமானின் மேற்குறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.

    சிமானின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க நடிகைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த 8-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
    • 6 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி வக்பு சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்துக்கு கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அந்த சட்டத் திருத்தம் கடந்த 8-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

    இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க., ஆம்ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு, ஓவைசி கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    மொத்தம் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 மாநில அரசுகள் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அகில பாரத இந்து மகா சபா, இந்து சேனா போன்ற அமைப்புகளும் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

    இந்த மனுக்கள் நேற்று பிற்பகல் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவன், சி.யு.சிங் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

    வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டுமா அல்லது ஐகோர்ட்டுகளுக்கு அனுப்பலாமா? என்பது குறித்து மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டார்.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என புதிய சட்டத்தில் கூறியிருப்பது அரசியல் சாசனத்தின் 26-வது பிரிவை மீறும் செயல்" என வாதாடினார்.

    அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, "வக்பு கவுன்சிலில் பிற மதத்தினரை உறுப்பினராக நியமிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்து மத அறக்கட்டளைகளில் முஸ்லிம்கள் உறுப்பினர்களாக சேர அனுமதிப்பீர்களா" என கேள்வி எழுப்பினார்.

    இந்திய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை ஐகோர்ட்டுக்கு அனுப்பக் கூடாது என மனுதாரர் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். மேலும் புதிய சட்டத்தின் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

    மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, "வக்பு திருத்த மசோதா பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து தனது பரிந்துரையை அளித்தது. அதன் பிறகு நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது" என்றார்.

    தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, "100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்தை வக்பு என அறிவித்ததும், அதை வக்பு வாரியம் கையகப்படுத்தி வேறு விதமாக அறிவிக்கிறது என்று மேத்தா கூறுகிறார்" என்றார்.

    அப்போது குறுக்கிட்ட மேத்தா, "ஒருவருக்கு வக்பு இருந்தால், அதை அறக்கட்டளையாக மாற்ற முடியும். அதற்கான வழிவகை உள்ளது" என்றார். அப்போது, "கடந்த காலத்தை மாற்றி எழுத முடியாது" என தலைமை நீதிபதி கூறினார்.

    இறுதியில், 3 முக்கிய அம்சங்களை நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு வக்பு திருத்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    முதலாவதாக, எந்த ஒரு சொத்தும் பயனாளரால் அல்லது கோர்ட்டால் வக்பு என அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெறக்கூடாது.

    இரண்டாவதாக, பிரச்சினைக்குரிய சொத்து தொடர்பான விசாரணையை மாவட்ட கலெக்டர் தொடரலாம். ஆனால் புதிய சட்டத்தில் உள்ள பிரிவு பொருந்தாது.

    மூன்றாவதாக, வக்பு வாரியத்தின் அலுவல் வழி உறுப்பினர் பிற மதத்தவராக இருக்கலாம், ஆனால் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 3 முக்கிய அம்சங்களை தெரிவித்தனர்.

    இதையடுத்து, இடைக்கால தடை விதிப்பதற்கு மத்திய அரசும் சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கேட்டனர்.

    அப்போது, கூடுதலாக 30 நிமிடம் தருகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு இந்த வழக்கு மீதான விசாரணை நாளை (இன்று) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இன்று பிற்பகல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. அப்போது 3 முக்கிய அம்சங்கள் மீது நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.
    • கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு.

    2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    ராமமூர்த்தி என்பவர் 2021-ம் அண்டு இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் தடை 6 மாதத்தில் காலாவதி ஆகி விடும் என தீர்ப்பளித்தது
    • காலதாமதம் நடைமுறை சிக்கல்களாலும் ஏற்படலாம் என இன்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது

    கடந்த வருடம், ஏசியன் ரீசர்ஃபேசிங் ஆஃப் ரோட் ஏஜென்சி (Asian Resurfacing of Road Agency) எனும் நிறுவனத்தின் இயக்குனருக்கும் மத்திய புலனாய்வு துறைக்கும் (CBI) இடையே நடைபெற்ற ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இவ்வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், உயர் நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் வழங்கும் "இடைக்கால தடை உத்தரவு" (interim stay) என்பது 6 மாதங்கள் கடந்தததும் - பிரத்யேகமாக நீதிமன்றத்தாலேயே நீட்டிக்கப்படாத நிலையில் - தானாக செயலற்றதாகி விடும் என கடந்த 2018 டிசம்பர் 1 அன்று தீர்ப்பளித்தது.

    இதன் விளைவாக, விசாரணை அமைப்புகளுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பெற்றவர்கள், 6 மாத காலகட்டத்திற்கு பிறகு எந்த விசாரணை அல்லது அதிகாரபூர்வ நடவடிக்கைகளை அந்த அமைப்புகள் நிறுத்தி வைக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது எனும் நிலை ஏற்பட்டது.

    இந்த தீர்ப்பு குறித்தான மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளை (ஏ.எஸ்.ஓகா, ஜே.பி.பர்திவாலா, பங்கஜ் மிதால் மற்றும் மனோஜ் மிஸ்ரா) கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அந்த தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக தெரிவித்து இன்று அதனை ரத்து செய்தது.

    இது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தெரிவித்ததாவது:

    ஒரு நபருக்கோ, அல்லது நிறுவனத்திற்கோ, அல்லது அமைப்பிற்கோ எதிராக விசாரணை அல்லது நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, அது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், வழக்கு விசாரணை முடியும் வரை அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பிறப்பிக்கும் தடையுத்தரவு காலவரையற்றதாக இருந்து, தொடர வேண்டிய வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நீடித்து கொண்டே சென்றால், நியாயமான சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை தொடர்வதிலும், தங்கள் கடமையை செய்வதிலும், அதிகார மையங்களுக்கும், விசாரணை அமைப்புகளுக்கும் சிக்கல் ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கிறோம்.

    ஆனால், நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஏற்படும் பெரும்பாலான காலதாமதங்கள், வழக்கை எடுத்து கொள்வதில் ஏற்படும் தாமதம், நீதிமன்ற விடுமுறை போன்ற பல காரணங்களை உள்ளடக்கியது.

    எனவே, 6 மாதத்தில் தடையுத்தரவு தானாக காலாவதியாகி விடும் என்பது அந்த உத்தரவை போராடி பெற்ற மனுதாரர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகலாம்.

    எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம்.

    இவ்வாறு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விளக்கம் அளித்தது.

    • போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது.
    • வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

    அந்த வகையில், 2024ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    குரூப் 2 தேர்வு அறிவிப்பில், இறுதிவிடை குறித்து, விடைத்தாள் நகல் பெறுவது குறித்த விதிகளை சட்டவிரோதம் அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கு முடியும் வரை குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    • ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு.
    • ஒப்பந்தப்படி 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விநியோக உரிமைக்கான ரூ.1.84 கோடி பாக்கி தொகையை வழங்கும் வரை படத்தை வெளியிடக்கூடாது என ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு தொடர்ந்திருந்தது.

    இரண்டாம் குத்து படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ஒப்பந்தப்படி 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

    மத்தியஸ்தர் உத்தரவுப்படி பணத்தை வழங்காமல் ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில், பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×