என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waqf Amendment Act"

    • வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
    • வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ், ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    வழக்கு விசாரணையின்போது, வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. அதே சமயம் வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    இந்நிலையில், புதிய வக்பு வாரிய சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது என தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது. பல்வேறு பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி அவர் அறிவித்துள்ளார்.

    • சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.
    • சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.

    வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ தள பதிவில்,

    தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை

    2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை

    3) 'வக்பு பயனர்' என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)

    4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

    இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது
    • வக்ஃபு வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ் , ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    வக்பு திருத்தச் சட்டம் 2025 இல், ஒருவர் வக்பு வாரியம் அமைக்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய வக்பு சட்டத்தின் ஒரு பிரிவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    மேலும், வக்பு வாரியத்தில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், வக்பு கவுன்சிலில் 4 முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    • நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் அனைத்தும் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
    • வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது

    வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ் , ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்பு கள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    கடந்த மாதம் 17-ந் தேதி விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மே 5-ந் தேதி வரை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 5-ந் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தான் 13-ந் தேதி ஓய்வு பெறுவதால் அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்கும். மே 15-ந் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது வக்பு சட்டதிருத்தம் தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும், வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இரு தரப்பும் வருகிற 19-ந்தேதிக்குள் தங்களது எழுத்துப்பூர்வ குறிப்புகளை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 20-ந்தேதி இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றும் 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தின் முந்தைய விதிகளை நிறுத்தி வைக்கக் கோரும் எந்தவொரு மனுவையும் பரிசீலிக்கப் போவதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் அனைத்தும் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
    • சம்பந்தப்பட்ட தரப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால் இடைக்கால உத்தரவு .

    வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு நேற்று தொடங்கியது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அத்துடன் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தது.

    அதன்படி இன்று மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் "மத்திய அரசு சார்பில் வக்பு திருத்த சட்டத்தின் சில சரத்துகளை பார்த்து உத்தரவு பிறப்பிக்க கூடாது. இடைக்கால தடையும் விதிக்கக் கூடாது. ஒரு வார காலத்திற்கு எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம். ஒரு வாரத்தில் எதுவும் ஆகிவிடாது" என வாதிட்டார்.

    அதற்கு நீதிபதிகள் "வக்பு வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் உச்சநீதிமன்றம் விரும்புகிறது. நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் அனைத்தும் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த உத்தரவும் இப்போது பிறப்பிக்கவில்லை. புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. வக்ஃபு என பதியப்பட்ட, வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது." எனத் தெரிவித்தனர்.

    • கடந்த 8-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
    • 6 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி வக்பு சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்துக்கு கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அந்த சட்டத் திருத்தம் கடந்த 8-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

    இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க., ஆம்ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு, ஓவைசி கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    மொத்தம் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 மாநில அரசுகள் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அகில பாரத இந்து மகா சபா, இந்து சேனா போன்ற அமைப்புகளும் வக்பு சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

    இந்த மனுக்கள் நேற்று பிற்பகல் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவன், சி.யு.சிங் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

    வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டுமா அல்லது ஐகோர்ட்டுகளுக்கு அனுப்பலாமா? என்பது குறித்து மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டார்.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என புதிய சட்டத்தில் கூறியிருப்பது அரசியல் சாசனத்தின் 26-வது பிரிவை மீறும் செயல்" என வாதாடினார்.

    அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, "வக்பு கவுன்சிலில் பிற மதத்தினரை உறுப்பினராக நியமிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்து மத அறக்கட்டளைகளில் முஸ்லிம்கள் உறுப்பினர்களாக சேர அனுமதிப்பீர்களா" என கேள்வி எழுப்பினார்.

    இந்திய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை ஐகோர்ட்டுக்கு அனுப்பக் கூடாது என மனுதாரர் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். மேலும் புதிய சட்டத்தின் சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

    மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, "வக்பு திருத்த மசோதா பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து தனது பரிந்துரையை அளித்தது. அதன் பிறகு நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது" என்றார்.

    தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, "100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்தை வக்பு என அறிவித்ததும், அதை வக்பு வாரியம் கையகப்படுத்தி வேறு விதமாக அறிவிக்கிறது என்று மேத்தா கூறுகிறார்" என்றார்.

    அப்போது குறுக்கிட்ட மேத்தா, "ஒருவருக்கு வக்பு இருந்தால், அதை அறக்கட்டளையாக மாற்ற முடியும். அதற்கான வழிவகை உள்ளது" என்றார். அப்போது, "கடந்த காலத்தை மாற்றி எழுத முடியாது" என தலைமை நீதிபதி கூறினார்.

    இறுதியில், 3 முக்கிய அம்சங்களை நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு வக்பு திருத்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    முதலாவதாக, எந்த ஒரு சொத்தும் பயனாளரால் அல்லது கோர்ட்டால் வக்பு என அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெறக்கூடாது.

    இரண்டாவதாக, பிரச்சினைக்குரிய சொத்து தொடர்பான விசாரணையை மாவட்ட கலெக்டர் தொடரலாம். ஆனால் புதிய சட்டத்தில் உள்ள பிரிவு பொருந்தாது.

    மூன்றாவதாக, வக்பு வாரியத்தின் அலுவல் வழி உறுப்பினர் பிற மதத்தவராக இருக்கலாம், ஆனால் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 3 முக்கிய அம்சங்களை தெரிவித்தனர்.

    இதையடுத்து, இடைக்கால தடை விதிப்பதற்கு மத்திய அரசும் சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கேட்டனர்.

    அப்போது, கூடுதலாக 30 நிமிடம் தருகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு இந்த வழக்கு மீதான விசாரணை நாளை (இன்று) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இன்று பிற்பகல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. அப்போது 3 முக்கிய அம்சங்கள் மீது நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் பதிவு நடைமுறை இல்லாத காலத்திலிருந்தே வக்பு சொத்துக்கள் உள்ளது.
    • வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை?

    வக்பு திருத்த சட்ட மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமானது.

    இந்த வக்பு சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி.. ஜே.டி.யு. ஓவைசி எம்.பி., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனி நபர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் மீதான இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

    விசாரணையின்போது, ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் பதிவு நடைமுறை இல்லாத காலத்திலிருந்தே வக்பு சொத்துக்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வக்பு சொத்துக்கள் எவை என மாவட்ட ஆட்சியர்கள் தீர்மானிப்பது நியாயமானதா?   என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

    மேலும் இந்து அறக்கட்டளை வாரியங்களில் இனிமேல் உறுப்பினர்களாக இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா?. இந்து சமய அறநிலையத்துறை, திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஆகியவற்றில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? இப்படியிருக்க, வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    இந்த வினாக்களுக்கு வெளிப்படையாக பதில் சொல்லுமாறு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கண்டிப்புடன் கேட்டனர். மேலும் இவற்றுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.  

    முன்னதாக மனுதாரர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், வக்பு வாரியத்தில் பிற மதத்தினரை உறுப்பினராக சேர்ப்பது நேரடி விவிதிமீறல் என வாதிட்டார். மேலும் "இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. இஸ்லாம் வாரிசு உரிமை என்பது மரணத்திற்கு பிறகுதான். அதற்கு முன்பாக யாரும் தலையிட முடியாது" என வாதிட்டார்.

    • வக்பு சட்டத்திற்கு எதிராக 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
    • தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது

    வக்பு திருத்த சட்ட மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இதற்கிடையே வக்பு சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி. ஜே.டி.யு. ஓவைசி எம்.பி., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனி நபர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களும் இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு இதனை விசாரிக்கிறது

    • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
    • முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    லக்னோ:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    முர்ஷிதாபாத் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி அமைதியாக இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் மிரட்டல்களுக்கு மேல் மிரட்டல்களை விடுக்கின்றனர்.

    வங்கதேசத்தில் நடந்ததை அவர்கள் வெட்கமின்றி ஆதரிக்கிறார்கள். வங்கதேசத்தை அவர்கள் விரும்பினால் அவர்கள் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் ஏன் இந்திய நிலத்திற்கு சுமையாக இருக்கிறார்கள்?

    வங்கதேசம் பற்றி எரிகிறது. மாநில முதல் மந்திரி அமைதியாக இருக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரக்காரர்களுக்கு, கலவரத்தை உருவாக்க அனைத்து சுதந்திரத்தையும் அளித்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக முழு முர்ஷிதாபாத் தீப்பிடித்து எரிகிறது. ஆனால் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இத்தகைய அராஜகத்தை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • வக்பு போராட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது.
    • வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைக்கு 3 பேர் பலியாகினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    போராட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது. வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைக்கு 3 பேர் பலியாகினர்.

    இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் பஹராம்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

    யூசுப் பதான் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீ குடிப்பது போன்ற 3 புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தில், மதிய நேரத்தில் நல்லதொரு டீ. அமைதியான சூழல். இந்த தருணத்தில் மூழ்கி போயிருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்போது அமைதியான பின்னணியில், டீயை மகிழ்ச்சியாக பருகுவது போன்று அவர் வெளியிட்ட இந்தப் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா வெளியிட்ட செய்தியில், வங்காளம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துக்களாக பார்த்து கொல்லப்பட்டு வருகிறார்கள். யூசுப் பதான் மகிழ்ச்சியாக டீ பருகி கொண்டிருக்கிறார். இதுவே திரிணாமுல் காங்கிரஸ் கொடுக்கும் முன்னுரிமை. வங்காளம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது பதான் டீ குடித்து மகிழ்ச்சியாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
    • தலைமை நீதிபதி தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மனுக்களை விசாரிக்கிறது.

    வக்பு திருத்த சட்ட மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இதற்கிடையே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 10-க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மனுக்களை வருகிற 16ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த மனுக்களை விசாரிக்க இருக்கிறது.

    தலைமை நீதிபதியுடன் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநான் ஆகியோர் இந்த பெஞ்சில் இடம் பிடித்துள்ளனர். வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

    • பாஜக இந்த போதையிலிருந்து விடுபட விரும்பவில்லை. ஒரு அரசியல்வாதிக்கு ஒருபோதும் மதம் இருக்கக்கூடாது
    • இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

    வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான விவாதத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக இன்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் 3 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் அவைக்கு வெளியே ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் பாஜகவினரும் இடையே மோதல் வெடித்தது.

    ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மெஹ்ராஜ் மாலிக், பண்டிகைகளின் போது இந்துக்கள் குடிபோதையில் இருப்பார்கள் என்று கூறியதற்காக பாஜக எம்எல்ஏக்களால் அவைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டார்.

    "ஒரு முஸ்லிம் சம்பந்தப்படும் போதெல்லாம் பாஜகவினர் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இந்துக்கள் போதைக்கு அடிமையாவது குறித்து அவர்களுக்கு கவலையில்லை. மதுக் கடைகளை மூடுவார்களா என்று கேளுங்கள்.

    இல்லை, பண்டிகைகளின் போதும், திருமணங்களின் போதும் இந்துக்கள் குடிப்பதால் அவர்கள் அவற்றை மூட மாட்டார்கள், ஆனால் பாஜக இந்த போதையிலிருந்து விடுபட விரும்பவில்லை. ஒரு அரசியல்வாதிக்கு ஒருபோதும் மதம் இருக்கக்கூடாது" என்று அவர் கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்எல்ஏக்கள் அவருடன் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதன்பின் அவைக்குள் சென்ற மெஹ்ராஜ் மாலிக் தன்னை பாஜக எம்எல்ஏக்கள் தாக்கியதாக மேஜை மீது ஏறி நின்று முறையிட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

    ×