search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Nasar"

    • மோவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள மோவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ. எஸ். சந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி, பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை வகித்தனர்.

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் மு.ராஜேந்திரன், பூண்டி வட்டார கால்நடை மருத்துவர்கள் சரவண குமார், ஹரிஹரன் சிவசங்கர் பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் சா.மு. நாசர் ஆய்வு செய்தார்.
    • கடந்த ஆண்டு 6 வகை இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 9 வகையான இனிப்பு வகைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் ரூ.200 கோடிக்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 9 வகையான இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் சா.மு. நாசர் ஆய்வு செய்தார். அப்போது இனிப்புப் பொருட்களை பேக்கிங் செய்யும் புதிய எந்திர பணிகளை இயக்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து அவர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சார்பில் 9 வகையான இனிப்புகளும், கார வகைகளில் மிக்சர் உள்ளிட்ட காம்போ பேக் விற்பனைக்கு தயார் செய்யும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    சிறப்பு இனிப்புகள் விலை விவரம்:

    நெய் பாதுஷா

    250 கிராம்

    ரூ.190

    ஸ்பெஷல் நட்ஸ் அல்வா

    250 கிராம்

    ரூ.190

    மோதி பபாக்

    250 கிராம்

    ரூ.180

    காஜு பிஸ்தா ரோல்

    250 கிராம்

    ரூ.320

    காஜு கட்லி

    250 கிராம்

    ரூ.260

    நெல்லை அல்வா

    250 கிராம்

    ரூ.125

    கருப்பட்டி அல்வா

    250 கிராம்

    ரூ.170

    வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள்

    500 கிராம்

    ரூ.450

    ஆவின் மிக்சர்

    200 கிராம்

    ரூ.100

    பின்னர் அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 6 வகை இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 9 வகையான இனிப்பு வகைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விற்பனை ரூ.82.24 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அதற்கான அனைத்து விற்பனை யுக்திகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் கூட்டுறவு அரசு நிறுவனங்கள், போக்குவரத்து துறை அரசுத்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ், ஆவின் பொருட்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் அம்பத்தூர் மட்டுமல்லாமல் திருவள்ளூர், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் நிறுவன கிளைகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சிறப்பு விற்பனைக்கு தொலைபேசி மூலம் பதிவு செய்தால், இலவசமாக வீட்டுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பால்வளத்துறை ஆணையரும், மேலாண்மை இயக்குனருமான சுப்பையன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்த ராஜன், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் திருத்தணி கோவில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், டி.ஆர்.ஓ. அசோகன், சப்-கலெக்டர் மகாபாரதி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்களுக்கும் கொரோனா பரவுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், வேறு சில உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கும் கொரோனா எளிதில் ஒட்டிக்கொள்கிறது. அதனால் தான் மீண்டும் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    நேற்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் திருத்தணி கோவில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், டி.ஆர்.ஓ. அசோகன், சப்-கலெக்டர் மகாபாரதி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் சா.மு.நாசருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

    இதனால் அமைச்சர் சா.மு.நாசர் அடையாறில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வீட்டிலேயே சிகிச்சை பெறுகிறார்.

    தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை டுவிட்டர் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.

    • ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 10 ஆண்டுகளாக மூழ்கிப்போன ஆவினை இன்றைய தினம் நீர்மூழ்கி கப்பலாக மாற்றி வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

    கோவை:

    கோவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மலுமிச்சம்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுடன் பால் கொள்முதல் குறித்து இன்று காலையில் கள ஆய்வு நடத்தினார்.

    தொடர்ந்து, மதுக்கரையில் ஆய்வு பணியை மேற்கொண்டார். பின்னர், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ் புரம் உயர் தொழில்நுட்ப ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மூழ்கிப்போன ஆவினை இன்றைய தினம் நீர்மூழ்கி கப்பலாக மாற்றி வருகிறோம். உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் முழுவதும் அனைத்து ஆவின் விற்பனை நிலையங்களை துவக்கி வைத்து வருகிறோம்.

    கோவை மாநகரத்தில் இன்று ஒரு கோடி மதிப்புள்ள ஆவின் பாலகத்தை திறந்து வைத்துள்ளோம். கடந்த ஆட்சியின் போது காலிப்பணியிடங்களை நிரப்ப முறைகேடு நடந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பணியிடங்கள் நிறுத்தப்பட்டு விட்டது. அதனை முறைப்படுத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஆவின் தலைவர் பதவி இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதிய பால் பண்ணை கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் ஏற்படுத்த உள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய விசாரணையில் தவறு செய்த நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தவறுகள் யார் செய்தாலும் தண்டிக்கப்படுவர். மேலும், ஆவின் பாலகத்தில் சிக்கன் போன்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.

    இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 கடைகள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் எங்களின் தரத்திற்கு ஏற்றவாறு பேசினால் பேசலாம். அவர் நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்கியவர்.

    ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்து தவறானது. அவர் தன்னை முன்னிலைப்படுத்தி நானும் ரவுடி, நானும் ரவுடி என்பது போல் கூறி வருகிறார். ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் தயாரிக்க சாத்தியம் குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஆய்வுக்கு முடிவுக்கு பிறகு தான் ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதற்குள், சுகாதாரத்துறை அமைச்சர் ரூ. 77 கோடி வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை மீது நிச்சயமாக வழக்கு தொடரப்படும். இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை. ஆவின் உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 24 லட்சம் இருந்தது. தற்போது அரசின் நடவடிக்கை காரணமாக ரூ.42 லட்சம் அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.

    தொடர்ந்து ஆவின் பச்சாபாளையத்தில் அமைச்சர் ஆய்வு பணியை மேற்கொண்டார். இதில், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    ×