என் மலர்
நீங்கள் தேடியது "Yusuf Pathan"
- யூசுப் பதான் மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பழமையான ஆதீனா மசூதிக்கு சென்றார்.
- கி.பி 1373-1375 காலகட்டத்தில் இந்த மசூதி கட்டப்பட்டது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான யூசுப் பதான் மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பழமையான ஆதீனா மசூதிக்கு சென்றார்.
இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அந்த பதிவில், "மேற்கு வங்காளத்தின் மால்டாவில் உள்ள ஆதீனா மசூதி, 14 ஆம் நூற்றாண்டில் இலியாஸ் ஷாஹி வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளரான சுல்தான் சிக்கந்தர் ஷாவால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க மசூதியாகும். கி.பி 1373-1375 இல் கட்டப்பட்ட இந்த மசூதி அந்த காலத்தில் இந்திய துணைக் கண்டத்தின் மிகப்பெரிய மசூதியாக இருந்தது. இது இப்பகுதியின் கட்டிடக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
யூசுப் பதானின் இந்த பதிவை பகிர்ந்த மேற்குவங்க பாஜக, "இது ஆதீனா மசூதி அல்ல ஆதிநாத் கோவில்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஆதீனா மசூதிக்குள் நுழைந்த பூசாரிகள் இந்து சடங்குகளை நடத்தினர். பிருந்தாவனத்தில் உள்ள விஸ்வவித்யா அறக்கட்டளையின் தலைவரான ஹிரன்மோய் கோஸ்வாமி, இந்து கோவிலின் மீது மசூதி கட்டப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து கோஸ்வாமி மீது இந்திய தொல்லியல் துறை வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
லீட்ஸ்:
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிய இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பொல்லார்டு 74 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 148 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி 50 ரன் எடுத்தார்.
இந்த போட்டியில் வெற்றிக்கான ரன்னை யூசப் பதான் சிக்சர் விளாசி முடித்து வைத்தார். இந்தியா வெற்றி பெற்றவுடன் ஓய்வு அறையில் இருந்த ஷிகர் தவான் நடனமாடி கொண்டாடினார். மேலும் வெற்றி கொண்டாட்டத்தில் யூசப் பதான் வெளியில் இருந்து போட்டியை ரசித்த சிறுவர்களை மைதானத்திற்குள் அழைத்து வந்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.
- அபிஷேக் பானர்ஜி மம்தாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பொய்களை பரப்புவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இதனால் உலக நாடுகளுக்கு இதை எடுத்துக்கூறும் வகையில் மத்திய அரசு 7 எம்பிக்கள் தலைமையில் அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் இந்த குழுவில் உள்ளனர்.
அதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரரும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா தலைமையிலான குழுவில் யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார். இந்த குழுவினர் இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர். இந்நிலையில் தான் யூசுப் பதான் அந்த குழுவுடன் சேர்ந்து செயல்படமாட்டார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசிக்காமல் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்றும், இதனால் குழுவில் இருந்து தனது கட்சி மொத்தமாக விலகுவதாவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் அரசாங்கம் தன்னைத் தொடர்பு கொண்டால் அதைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, திருமதி பானர்ஜியை அழைத்து, அவரை சமாதானப்படுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தான் யூசுப் பதானுக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். அபிஷேக் பானர்ஜி மம்தாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திரிணாமுல் காங்கிரசின் பொதுச்செயலாளரும் ஆவார்.
- வக்பு போராட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது.
- வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைக்கு 3 பேர் பலியாகினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
போராட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது. வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறைக்கு 3 பேர் பலியாகினர்.
இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் பஹராம்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
யூசுப் பதான் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீ குடிப்பது போன்ற 3 புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தில், மதிய நேரத்தில் நல்லதொரு டீ. அமைதியான சூழல். இந்த தருணத்தில் மூழ்கி போயிருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்போது அமைதியான பின்னணியில், டீயை மகிழ்ச்சியாக பருகுவது போன்று அவர் வெளியிட்ட இந்தப் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா வெளியிட்ட செய்தியில், வங்காளம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துக்களாக பார்த்து கொல்லப்பட்டு வருகிறார்கள். யூசுப் பதான் மகிழ்ச்சியாக டீ பருகி கொண்டிருக்கிறார். இதுவே திரிணாமுல் காங்கிரஸ் கொடுக்கும் முன்னுரிமை. வங்காளம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது பதான் டீ குடித்து மகிழ்ச்சியாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.
- ஜனவரியில் தொடங்கும் இந்த லீக் போட்டிகளில் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
- துபாயில் நடக்க உள்ள சர்வதேச டி 20 லீக் போட்டிகளில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய யூசப் பதானும் ஓய்வு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர்கள் இருவரும் துபாயில் நடக்க உள்ள சர்வதேச டி 20 லீக் போட்டிகளில் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
ஜனவரியில் தொடங்கும் இந்த லீக் போட்டிகளில் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.
- தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார்.
- அக்ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார்.
மும்பை:
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்த போட்டியில் 94 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் அக்ஷர் படேல் 6-வது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார். மறுமுணையில் அக்ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார். இதனால் தான் இந்திய அணி 162 என்ற சவால் கொடுக்கும் ஸ்கோரை எட்ட முடிந்தது.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் 6-வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் பட்டியலில் டோனி - யூசப் பதான் ஆகியோர் 2-வது இடத்தில் இருந்தனர். இவர்கள் 2009- ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்போது அக்ஷர் - ஹூடா ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் அதனை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஜோடி முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6-வது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இன்றும் இந்திய அணியின் சிறந்த பேட்டிங் ஜோடியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க துவங்கி உள்ளன.
- பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க துவங்கி உள்ளன.
அந்த வரிசையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. இதோடு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

மேற்கு வங்காள மாநிலத்தின் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசப் பதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதே தொகுதியில் ஐந்து முறை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த முறையும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடலாம் என்ற நிலையில், பிரபலம் ஒருவரை வேட்பாளராக களமிறங்க செய்யும் முடிவில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கிரிக்கெட் வீரர் யூசப் பதானை இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.
பஹரம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "இது போன்ற முடிவுகளை ஒருதலைப்பட்சமாக எடுப்பதோடு பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதையே காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இந்தியா கூட்டணியில் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை எதிர்க்கவே காங்கிரஸ் கட்சி நினைத்து வந்துள்ளது," என்று தெரிவித்தார்.
- பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார்.
- எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் பாராளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்காக நான் பணியாற்றுகிறேன். எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
2007-ம் ஆண்டு உலக கோப்பைக்கு உற்சாகமாக இருந்ததைப் போல தற்போதும் உற்சாகமாக இருக்கிறேன்.
குஜராத் எனது ஜென்ம பூமி மற்றும் மேற்கு வங்காளம் எனது கர்ம பூமி.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். ஆனால் காலம் மாறுகிறது, மாற்றம் நல்லதுக்காகவே நடக்கும் என தெரிவித்தார்.
#WATCH | West Bengal: Former cricketer and Trinamool Congress (TMC) candidate from Berhampore Yusuf Pathan says, "The field is very different but the expectations of the people remain the same- that I work for them, and carry forward the work done by my team (TMC)... I am as… pic.twitter.com/1XGmyrKhTW
— ANI (@ANI) March 21, 2024
- யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார்.
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டன.
பஹரம்புர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிறுத்தப்பட்டார். இவர் பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராகவும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ளார். இவரை எதிர்த்து மம்தா பானர்ஜி முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதானை நிறுத்தினார்.
இதில் யூசுப் பதான் வெற்றிபெறும் நிலையில் உள்ளார். யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார். யூசுப் பதான் 85 ஆயிரத்து 766 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் வெற்றி அருகில் உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மம்தாவுக்கும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் இடையில் வார்த்தை போர் நடைபெற்றது. மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார்.
தன்னை கடுமையாக விமர்சித்த மூத்த அரசியல்வாதியை ஒரு கிரிக்கெட் வீரரை நிறுத்தி மம்தா பானர்ஜி தோற்கடித்துள்ளார் என கூறப்படுகிறது.






