search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "All India Trinamool Congress"

    • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க துவங்கி உள்ளன.
    • பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க துவங்கி உள்ளன.

    அந்த வரிசையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. இதோடு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

     


    மேற்கு வங்காள மாநிலத்தின் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசப் பதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதே தொகுதியில் ஐந்து முறை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த முறையும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடலாம் என்ற நிலையில், பிரபலம் ஒருவரை வேட்பாளராக களமிறங்க செய்யும் முடிவில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கிரிக்கெட் வீரர் யூசப் பதானை இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.

    பஹரம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "இது போன்ற முடிவுகளை ஒருதலைப்பட்சமாக எடுப்பதோடு பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதையே காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இந்தியா கூட்டணியில் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை எதிர்க்கவே காங்கிரஸ் கட்சி நினைத்து வந்துள்ளது," என்று தெரிவித்தார்.

    ×